சென்னை: டி.என்.பி.எஸ்.சி. குரூப் 1 தேர்வுக்கான ஹால் டிக்கெட் இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. தேர்வர்கள் இணையத்திற்கு சென்று ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

TNPSC குரூப் 1 தேர்வு என்பது, மாநில அரசில் காலியாக உள்ள பணிகளுக்கு தேவையான மற்றும் தகுதியான நபர்களை தேர்ந்தெடக்க தமிழ்நாடு அரசு, நடத்தும் மாநில அளவிலான தேர்வாகும் . குரூப் 1 கேட்டகிரியில் மாநிலத்தில் 90 இடங்கள் காலியாக உள்ளது. இந்த காலியிடங்களை நிரப்புவதற்கான TNPSC குரூப் 1 தேர்வு 2025 அறிவிப்பை ஏற்கனவே வெளியிடப்பட்டது. அதன்படி, TNPSC குரூப் 1 தேர்வுக்கான தேர்வு மே 15, 2025 அன்று நடைபெற உள்ளது, அதற்கான நுழைவுச் சீட்டு (ஹால் டிக்கெட்) எப்போது வெளியாகும் என தேர்வர்கள் எதிர்பார்த்துக்கொண்டிருந்தனர்.
இந்த நிலையில், டிஎன்பிஎஸ்சி குரூப் 1 (ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு-1 மற்றும் ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு-1ஏ) தேர்வுக்கான ஹால்டிக்கெட் இணைய தளத்தில் வெளியிடப்பட்டு உள்ளதாக டிஎன்பிஎஸ் அறிவித்து உள்ளது.
குரூப் 1 பதவிகளுக்கான பொதுவான முதல்நிலை தேர்வு 15.06.2025 முற்பகல் நடைபெற உள்ளது. தேர்வு எழுத தற்காலிகமாக அனுமதிக்கப்பட்ட தேர்வர்களுக்கு தேர்வுக்கூட அனுமதிச்சீட்டு தேர்வாணையத்தின் இணையதளமான www.tnpscexams.in இல் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. தேர்வர்கள் தங்களுடைய ஒருமுறை பதிவுதளத்தின் மூலமாக மட்டுமே விண்ணப்ப எண், பிறந்த தேதி ஆகியவற்றை உள்ளீடு செய்து தேர்வுக்கூட அனுமதிச் சீட்டினை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.