பெங்களூரு

பிஎல் கிரிக்கெட் போட்டி கூட்டநெரிசலில் ஏற்பட்ட மரணம் குரித்து மனித உரிமைகள் ஆணையம் வழக்கு தொடர்ந்துள்ளது.

நேற்று முன்தினம் இரவு நிறைவுபெற்ற18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியின் இறுதிப்போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியை வீழ்த்தி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு வெற்றி பெற்றது. பெங்களூரு அணி ஐ.பி.எல். வரலாற்றில் கோப்பையை வெல்வது இதுவே முதல் முறை. என்பதால் அந்த அணி ரசிகர்கள் மட்டுமின்றி, கர்நாடக மக்களும் அந்த வெற்றியை உற்சாகமாக கொண்டாடினர்.

கோப்பையை வென்ற பெங்களூரு அணியின் வீரர்களுக்கு கர்நாடக அரசு சார்பில் பெங்களூரு விதானசவுதாவிலும் (சட்டசபை வளாகம்), பெங்களூரு அணி நிர்வாகம் சார்பில் பெங்களூரு சின்னசாமி கிரிக்கெட் மைதானத்திலும் பாராட்டு விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. சின்னசாமி மைதானத்திற்கு ரசிகர்கள் சிறுவர், சிறுமிகள், இளம்பெண்கள் என ஆயிரக்கணக்கானோர் திரண்டு வந்தார்கள்.

எனவே அங்கு கடும் கூட்ட நெரிசல் உண்டானதால் பாதுகாவலர்களும், போலீசாரும் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த முடியாமல் திணறினார்கள். எப்படியும் வெற்றி கொண்டாட்டத்தில் பங்கேற்று பெங்களூரு அணி வீரர்களை நேரில் பார்த்து விட வேண்டும் என்ற ஆசையில் ரசிகர்கள் மைதானத்திற்குள் செல்ல முய;ல .இதனால் பெரும் கூட்ட நெரிசல் உண்டானது.

இந்த நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாட்டையே உலுக்கியுள்ளது. போதிய முன்னேற்பாடுகள் இன்றி வெற்றிக்கொண்டாட்டத்திற்கு ஏற்பாடு செய்ததே இந்த துயர நிகழ்வுக்கு காரணம் என்று சொல்லப்படுகிறது. இந்த துயர சம்பவத்திற்கு பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

பெங்களூரு கூட்டநெரிசல் சம்பவம் தொடர்பாக தேசிய மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்து பெங்களூரு ஆட்சியர், காவல்துறை ஆணையருக்கு நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளது  ,பெங்களூரு சம்பவம் தொடர்பாக 7 நாட்களுக்குள் அறிக்கை அளிக்க தேசிய மனித உரிமைகள் ஆணையம்  உத்தரவிட்டுள்ளது.