ஸ்ரீநகர்: தெற்கு பாகிஸ்தான் எல்லையில் இன்று இரவு இந்திய விமானப்படை போர் பயிற்சி  நடத்த உள்ளதாக அறிவித்து உள்ளது. இதன்காரணமாக அந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வராமல் பாதுகாப்பாக இருக்கும்படி கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளார்கள்.

காஷ்மீர் மாநிலத்தில் உள்ள சுற்றுலா பகுதியான, பஹல்காம் பகுதிக்கு வந்த சுற்றுலா பயணிகளை அங்கு வந்த பயங்கரவாதிகள் சுட்டுக்கொன்றனர். குறிப்பாக இந்து ஆண்களை குறிவைத்து இந்த தாக்குல் நடத்தப்பட்டது.  கடந்த ஏப்ரல் 22ம் தேதி பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 அப்பாவி சுற்றுலா பயணிகள் கொல்லப்பட்டனர்.  இந்த கொடுஞ்செயலுக்க  இந்திய ராணுவம் பதிலடி கொடுத்தது.  ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை மேற்கொண்டது. இதில், ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இருந்த தீவிரவாத முகாம்கள் தாக்கி அழிக்கப்பட்டன. அதனைத் தொடர்ந்து இந்தியா- பாகிஸ்தான் இடையே போர் மூளும் சூழல் உருவானது. பின்னர் பாகிஸ்தான் ராணுவ தளபதி கேட்டுக்கொண்டதற்கிணங்க  தற்காலிக போர் நிறுத்தம் ஏற்பட்டது.

இதைத்தொடர்ந்து இந்திய ராணுவம் அவ்வப்போது எல்லை பகுதி மட்டுமில்லாமல்,  நாடு முழுவதும் போர் பயிற்சிகளை தீவிரப்படுத்தி வருகிறது. ஏற்கனவே தமிழ்நாடு உள்பட பல மாநிலங்களில் போர் பயிற்சி நடைபெற்ற நிலையில், இன்று இரவு பாகிஸ்தான் தெற்கு எல்லை பகுதியில் போர் பயிற்சி நடத்தப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில்,  பாகிஸ்தான் எல்லையில், குறிப்பாக தெற்குப் பகுதியில், இந்திய விமானப்படை (Indian Air Force) ஒரு பெரிய விமானப் பயிற்சியை நடத்த உள்ளது. இந்தப் பயிற்சி   இன்று (ஜுன் 5ந்தேதி) இரவு  நடத்தப்பட உள்ளது. இந்தப் பயிற்சியில் ரஃபேல், சு-30 மற்றும் ஜாகுவார் போன்ற போர் விமானங்கள் ஈடுபட உள்ளன. 

பயிற்சியின் நோக்கம்: ராணுவ தயார்நிலை மற்றும் செயல்பாட்டுத் திறனை சோதிப்பது, பாதுகாப்பு மற்றும் செயல்பாட்டு ஒருமைப்பாட்டை உறுதி செய்வது, எல்லைப் பகுதியில் வான்வெளியை கட்டுப்படுத்துவது. 
பயிற்சியின் போது: எல்லைப் பகுதியில் விமானப் போக்குவரத்து கட்டுப்படுத்தப்படும், இந்திய கடற்படையின் போர்க்கப்பல்கள் ஏவுகணை வீசி தாக்குதல் நடத்தும், சிவில் பாதுகாப்புப் பயிற்சிகளும் நடத்தப்படும்.  இந்த பயிற்சியானது இன்று இரவு 9 மணி முதல் நாளை அதிகாலை 2.30மணி வரை நடைபெறும்.

இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.