இந்தியன் பிரீமியர் லீக் டுவென்டி20 கிரிக்கெட் போட்டியின் இறுதிப் போட்டி பஞ்சாப் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளுக்கு இடையே அகமதாபாத்தில் நடைபெற்று வருகிறது.
18 ஆண்டுகால ஐ.பி.எல். வரலாற்றில் முதல்முறையாக இவ்விரு அணிகளும் இறுதிப் போட்டிக்குள் நுழைந்துள்ளது.

இதனால் தங்களது அணியே கோப்பையை வெல்லும் என்று இரு அணி ரசிகர்களும் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர்.
இந்த போட்டியைக் காண அகமதாபாத் வந்துள்ள இங்கிலாந்து முன்னாள் பிரதமர் ரிஷி சுனக், ஆர்.சி.பி. அணியே இம்முறை கோப்பையை வெல்லும் என்று ஆருடம் கூறியுள்ளார்.
இன்ஃபோசிஸ் நிறுவனர்களான நாராயண மூர்த்தி மற்றும் சுதா மூர்த்தியின் மகள் அக்ஷதாவை திருமணம் செய்துள்ள ரிஷி சுனக், ‘நான் பெங்களூரைச் சேர்ந்த ஒரு பெண்ணை மணந்திருக்கிறேன்.’ எனவே ஆர்.சி.பி எனது அணி. “நாங்கள் நீண்ட காலத்திற்கு முன்பு ஒரு போட்டியைப் பார்க்க ஒன்றாகச் சென்றோம்,” என்று கூறினார்.
இந்த முறை கோப்பை நமதே என்று ‘இ சாலா கப் நம்தே’ என கன்னடத்தில் கூறிய அவர், “16 வருஷத்துக்கு முன்னாடி நான் அக்ஷதாவுக்கு கன்னடத்துல ப்ரபோஸ் பண்ணேன், எனது உச்சரிப்பு இப்போது மேம்பட்டுள்ளது என்று நினைக்கிறேன்” என்று தனது நினைவுகளை மலர்ந்தார்.
மேலும், ‘விராட் கோலி இப்போது எனக்குப் பிடித்த வீரர்.’ நான் கோலியின் மிகப்பெரிய ரசிகன். அவர் உண்மையிலேயே ஒரு புகழ்பெற்ற வீரர். “நான் பிரிட்டன் பிரதமராக இருந்தபோது, இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் தீபாவளி பரிசாக விராட் கையெழுத்திட்ட ஒரு மட்டையை எனக்குக் கொடுத்தார்,” என்று அவர் கூறினார்.
கிரிக்கெட் வரலாற்றில் ஐபிஎல் ஒரு மாற்றத்தைக் கொண்டு வந்துள்ளது என்றும், ஒவ்வொரு வீரரும் உலகின் பணக்கார கிரிக்கெட் லீக்கில் விளையாட விரும்புகிறார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.