சென்னை: நீதிமன்றத்துக்கு சென்றுவிடுவோம் என்ற அச்சத்தில்மசோதாவுக்கு ஒப்புதல் வழங்கி உள்ளதாக முதலமைச்சர் ஸ்டாலின் கூறி உள்ளார்.

தமிழ்நாடு அரசின் மசோதாக்களுக்கு குறிப்பிட்ட காலத்திற்குள் ஒப்புதல் வழங்க வேண்டும் என ஆளுநருக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், அதன்பிறகு அவ்வப்போது தமிழ்நாடு அரசின் மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்கி வருகிறார்.  கடந்த மாதம் 4 மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்கிய நிலையில், தற்போது மேலும் இரண்டு மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்கி உள்ளார்.

இநத் நிலையில், இன்று   கருணாநிதியின் 102வது பிறந்தநாளையொட்டி சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள அவரது சிலைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் சிலைக்கு முன்பு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரது உருவப்படத்துக்கும் மாலை அணிவித்து மலர்தூவி வணங்கினார்.

இதையடுத்து செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் கூறிய முதலவர் ஸ்டாலின்,  தமிழக அரசின் மசோதாக்களுக்கு  ஆளுநர் ஒப்புதல் அளிப்பார் என்று எதிர்பார்த்ததுதான்.   நீதிமன்றத்துக்கு சென்றுவிடுவோம் என்ற அச்சத்தில் ஆளுநர், மசோதாவுக்கு ஒப்புதல் அளித்துள்ளார் என  கூறினார்.

முதலமைச்சர் ஸ்டாலின் பயத்தில்தான் ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளார் என்று பேசியிருப்பது ஆளுநரை சீண்டுவதாக இருக்கிறது சமூக வலைதளங்களில் விமர்சிக்கப்பட்டு வருகிறது.