துரை

நேற்று மதுரையில் முதல்வர் மு க ஸ்டாலின் தனது சகோதரர் முக அழகிரியை சந்தித்துள்ளார்.

File Picture

அடுத்த வருடம் தமிழகத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், ஆளுங்கட்சியான தி.மு.க. மதுரையில் இன்று கட்சியின் பொதுக்குழு கூட்டத்தை தி.மு.க. தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் நடத்த உள்ளது.

இந்த பொதுக்குழு கூட்டத்தில், 6 ஆயிரத்து 500 பொதுக்குழு உறுப்பினர்கள், மாநில, மாவட்ட நிர்வாகிகள், முக்கிய பிரமுகர்கள், சிறப்பு அழைப்பாளர்கள் என சுமார் 10 ஆயிரம் பேர் பங்கேற்க இருக்கின்றனர்.

சட்டசபை தேர்தலை முன்னிறுத்தி நடைபெறும் இந்த பொதுக்குழு கூட்டத்தில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது. நேற்று தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்பதற்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மதுரை சென்றார்.

நேற்று மதுரையில் ரோடு ஷோ நடத்திய முதல்வர் மு.க. ஸ்டாலின், அதன் பின்னர் முன்னாள் மேயர் முத்துவின் வெண்கல சிலையை திறந்து வைத்த பின் மதுரை பழங்காநத்தம் பகுதியில் உள்ள தனது சகோதரர் மு.க.அழகிரியை, முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் சந்தித்துள்ளார்.

தமிழக முதல்வராக பதவியேற்ற பின், தற்போதுதான் முதல்முறையாக மு.க.அழகிரி இல்லத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.