நோ நான்வெஜ். வந்தே பாரத் வில்லங்கம்.

பழைய விஷயங்களையே ஜிம்கானா வேலை செய்து புதுசு மாதிரி காட்டி மோடி அரசு உருட்டிக் கொண்டிருக்கும் பல விஷயங்களில் ஒன்று, வந்தே பாரத் ரயில்.
காங்கிரஸ் காலத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட ராஜசானி எக்ஸ்பிரஸ் எல்லாம் 160 கிலோமீட்டர் வேகத்தில் ஓடிக் கொண்டிருக்க, வெறும் 130 கிலோ மீட்டர் வேகத்தில் மட்டுமே ஓடக்கூடியதுதான் வந்தே பாரத் ரயில்.
120 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ்க்கும் வந்தே பாரத்துக்கும் இடையே மணிக்கு 10 கிலோமீட்டர் வேகம்தான் வித்தியாசம். வந்தே பாரத் வேகமாக செல்ல வேண்டும் என்பதற்காக அதிக நிறுத்தங்களை குறைத்திப்பார்கள். அவ்வளவுதான்.
சென்னையில் இருந்து கோவை மைசூர் திருநெல்வேலி நாகர்கோவில் போன்ற இடங்களுக்கு வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படுகின்றன.
சொகுசு ரயில் என்று ஏகப்பட்ட கட்டணத்தை பிடுங்கும் இந்த ரயில்களில் இப்போது பயணிகளுக்கு புதிய சோதனை.
பயணிகளுக்கான விருப்ப மெனுவிலிருந்து நான்வெஜ் எனப்படும் அசைவ உணவு வகைகளை நீக்கி இருக்கிறது.
காலை பிரேக்ஃபாஸ்ட் மெனுவில் இந்த நான்வெஜ் ஆப்ஷனே இல்லை என்கின்றனர் பயணிகள்.
சென்னை நாகர்கோவில் வந்தே பாரத் ரயிலில் அடிக்கடி பயணம் செய்யும் டேவிட் மனோகர் என்பவர், இது பற்றி புகார் தெரிவித்ததும் ஐஆர்சிடிசி நிர்வாகம் பதில் அளித்ததாகவும் ஆனால் அந்த பதிலை உடனே சமூக வலைத்தளங்களில் அவர்கள் நீக்கி விட்டதாகவும் கூறுகிறார்.
பயணிகளுக்கான உணவு உரிமையை வந்தே பாரத் ரயில்கள் பறிப்பது எந்த வகையில் நியாயம் என்பதே பெரும்பாலானோரின் கேள்வி.
ஏற்கனவே வேகாத பொறுப்புடன் கூடிய சாம்பார், தரம் இல்லாத அரிசி போன்றவற்றால் பாரத் ரயிலில் கொடுக்கப்படும் மதிய சாப்பாட்டின் லட்சணம் சொல்லி மாறாது என்று குமுறுகிறார் ஏ.எல். செல்வம் என்ற பயணி.
நீங்கள் இது பற்றி என்ன கதறு கதறினாலும் தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங் வாயே திறக்க மாட்டார் பாருங்களேன் என்று கிண்டல் அடிக்கின்றனர் விஷயம் தெரிந்தவர்கள்.
– செய்தி பிரிவு