தூத்துக்குடி: திருசெந்தூர் முருகன் கோவிலில் வைகாசி விசாக வசந்த் திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கிறது. 10 நாட்கள் நடைபெறும் இத்திருவிழாவின் முக்கிய நிகழ்வான விசாகத் திருவிழா ஜூன் 9ந்தேதி நடைபெற உள்ளது. அன்றைய தினம்

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் வரும் வைகாசி விசாகத் திருவிழா இன்று தொடங்கி 10 நாள்கள் நடைபெறுகிறது. பத்தாம் நாளான ஜூன் 9ஆம் தேதி வைகாசி விசாகத் திருவிழா நடைபெறுகிறது. அன்றைய தினம் அதிகாலை 1 மணிக்கு கோயில் திறக்கப்பட்டு, 1.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், பின்னர் 2 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம் நடைபெறும். காலை 9 மணிக்கு உச்சிகால அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடைபெறும். அதனைத் தொடர்ந்து, சுவாமி சப்பரத்தில் எழுந்தருளி மண்டபத்துக்குச் சென்று, மாலை நேரத்தில் சிறப்பு அபிஷேகமும், அலங்கார தீபாராதனையும் நடைபெறும். இதை காண நாடு முழுவதும் இருந்து லட்சக்கணக்கானோர் திருச்செந்தூர் வருவார்கள் என்பதால், அன்றைய தினம் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.
வைகாசி விசாக திருவிழா நாள்களில் நாள்தோறும் பகலில் சுவாமி ஜெயந்திநாதா் சப்பரத்தில் திருக்கோயில் சண்முக விலாசம் மண்டபத்தில் எழுந்தருளுகிறாா். அங்கு சுவாமி ஜெயந்திநாதருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனையாகி, மண்டபம் சுற்றி வந்து பக்தா்களுக்கு அருள்பாலிக்கிறாா். அப்போது, மேளதாளம் முழங்க, பக்தா்கள் கப்பல் பாடல்கள் பாட மண்டபத்தை 11 முறை சுவாமி வலம் வருகிறாா்.
திருவிழாவின் முக்கிய நாளான 10வது நாளான இறுதிநாள் (ஜூன் 9ஆம் தேதி) வைகாசி விசாகம் திருவிழா நடைபெறுகிறது. இதை முன்னிட்டு, கோயிலில் அதிகாலை 1 மணிக்கு நடைதிறக்கப்பட்டு, 1.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 2 மணிக்கு உதயமாா்த்தாண்ட அபிஷேகம், காலை 9 மணிக்கு உச்சிகால அபிஷேகம் மற்றும் தீபாராதனையாகிறது. அதன்பின்னா் சுவாமி ஜெயந்திநாதா் திருக்கோயிலிலிருந்து சப்பரத்தில் எழுந்தருளி சண்முக விலாசம் மண்டபம் சோ்கிறாா். அங்கு மாலையில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார தீபாராதனை நடைபெறுகிறது. விழாவின் முக்கிய நிகழ்வான முனிக்குமாரா்களுக்கு சாப விமோசனம் அளிக்கும் வைபவம் நடைபெறுகிறது. பின்னா், மகா தீபாராதனையாகி, சுவாமி ஜெயந்திநாதா், வள்ளி, தெய்வானையுடன் பக்தா்களுக்கு அருள்பாலிக்கிறாா்.
க்கு சாப விமோசனம் அளிக்கும் வைபவம் நடைபெறுகிறது. பின்னர், மகா தீபாராதனையாகி, சுவாமி ஜெயந்திநாதர், வள்ளி, தெய்வானையுடன் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். இந்நிலையில், திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கோயில், விசாகத் திருவிழாவை ஒட்டி வரும் 9ம் தேதி உள்ளூர் விடுமுறை விடப்படும் என மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் அறிவித்துள்ளார்.