சென்னை: மறைந்த நடிகர் ராஜேஷ் உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துணைமுதலமைச்சர் உதயநிதி ஆகியோரிர் நேரில் அஞ்சலி செலுத்தினர்.

பிரபல தமிழ் நடிகரான ராஜேஷ் இன்று காலை உடல்நலம் பாதிப்பு காரணமாக காலமானார். அவரது மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும், ரஜினி உள்பட திரையுலகை சேர்ந்தவர்கள் இரங்கல் தெரிவித்தும், நேரில் சென்று அஞ்சலி செலுத்தியும் வருகின்றனர்.

இந்த நிலையில்,  ராமாபுரத்தில் குடும்பத்துடன் வசித்து வந்த ராஜேஷ் உடலுக்கு முதலமைச்சர் நேரில் அஞ்சலி செலுத்தினார்.   ராமாபுரம் கோத்தாரி நகரில் உள்ள அவரது இல்லத்தில், ராஜேஷ் உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ள நிலையில்,    ராஜேஷ் உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து,   துணை முதலமைச்சர் உதயநிதி, அமைச்சர்கள் கே.என்.நேரு உள்ளிட்டோரும் ராஜேஷ் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.