தைலாபுரம்: பாமகவில், கட்சியின் நிறுவனதான மருத்துவர் ராமதாசுக்கும், கட்சி தலைவரான மகன் அன்புமணிக்கும் இடையே மோதல் போக்கு எழுந்துள்ளது. இந்த நிலையில், அன்றே செத்து விட்டேன் , அவரை மத்திய அமைச்சராக்கி நான் தவறு செய்துவிட்டேன், ”வளர்த்த கடா மார்பில் பாய்ந்தது மகன் அன்புமணியை ராமதாஸ் கடுமையாக விமர்சித்து உள்ளார்.
வீதிக்கு வந்த குடும்ப சண்டை காரணமாக, பாமகவில் பரபரப்பு எழுந்துள்ளது. ஏற்கனவே பாமக நிர்வாகிகள் பலர் மாற்று கட்சிகளுக்கு தாவி வரும் நிலையில், தற்போதைய நிகழ்வு பாமகவை அடியோடு படுகுழியில் தள்ளும் என்பதை மறுக்க முடியாது.

தர்மபுரியில் கடந்த மே24 ஆம் நடந்த நினைவேந்தல் பொதுக்கூட்டத்தில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கலந்துக்கொண்டு பேசினார். ”அப்போது தான் ஒரு மாத காலமாக பயங்கர மன உளைச்சலில் இருந்தேன், எனக்கு உறக்கம் வரவில்லை, நான் என்ன தவறு செய்தேன் என்று எனக்குள் கேட்டுக் கொண்டிருந்தேன்,நான் ஏன் மாற்றப்பட்டேன்? அப்படி என்ன தவறு செய்தேன் என்று எனக்கு தெரியவில்லை என்று பேசியிருந்தார். ”
இந்த நிலையில், திண்டிவனம் அருகேயுள்ள தைலாபுரம் இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்த பாமக நிறுவனர் ராமதாஸ் ”தர்மபுரியில் நடைபெற்ற கூட்டத்தில் அன்புமணி ஒரு மாதகாலமாக மன உளைச்சலில் இருந்ததாகவும் ஏன் இந்த பதவி இறக்கம் என பேசியிருந்தார். இது முழுக்க முழுக்க மக்களையும் கட்சிகாரர்களை திசை திருப்பும் முயற்சியாகும் தான் செய்த தவறுகளை மறைக்க அனுதாபம் பெற முயற்சித்திருக்கிறார் என்று குற்றம் சாட்டியவர். தொடர்ந்து அன்புமணி மணி மீது ஏராளமான குற்றச்சாட்டுக்களை வீசினார்.
“மாவட்ட செயலாளர்களுக்கு அன்புமணியே ஃபோன் செய்து, ‘கூட்டத்துக்கு சென்றால், உங்களை அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து நீக்கிவிடுவார் ஐயா’ என சொல்லி யிருக்கிறார் அதனால் 108 பேரில், 8 பேர்தான் கூட்டத்துக்கு வந்தார்கள்; அன்றே நான் செத்துவிட்டேன்; கற்பனை கூட செய்ய முடியாத இப்படியான பொய்களை, கூசாமல் சொல்வார் அன்புமணி” என்று நா தழுதழுக்க பேசிய ராமதாஸ்,
நான் தவறு செய்துவிட்டேன் என்றார். அன்புமணியை தன்னுடைய 35 வயதில் சத்தியத்தினை மீறி அவரை மத்திய அமைச்சராக்கி நான்தான் தவறு செய்துவிட்டேன் என்று கூறினார்.
பனையூரில் அலுவலகம் திறந்து இருக்கிறேன் என தொலைபேசி எண்ணை தந்து, நீங்கள் இனி என்னை அங்கு வந்து பார்க்கலாம் என அன்புமணி சொன்னது சரியான செயலா? – பாமக நிறுவனர் ராமதாஸ்.* நான்கு சோற்றுக்குள் பேசி முடிக்க வேண்டியதை நடுவிதிக்கு கொண்டு வந்தது யார்? அழகான, ஆள் உயர கட்சியான பாமகவை ஒரு நொடியில் உடைத்தது யார்?

கடந்த 45 ஆண்டுகளாக இந்த இயக்கத்தை அண்ணா சொன்னது போல கடமை கண்ணியம் கட்டுப்பாட்டோடு நடத்தி வந்தேன். அதற்கு அன்புமணி களங்கம் ஏற்படுத்தி விட்டார். எதிர்மறையாளர்களால் எத்தனையோ விதி சொற்களையும் ஏளனங்களையும் இந்த உவமை ஜனங்களுக்காக தாங்கிக் கொண்டவன் நான். ஆனால் வளர்த்த கடாவே மார்பில் வீறுகொண்டு பாய்ந்ததில் நான் நிலைகுலைந்து போய்விட்டேன்.
அன்புமணி தொடர்ந்து கட்சி வளர்ச்சிக்கு இடையூறாக இருந்து பல தவறுகளை செய்து வந்தார். பாமக கௌரவத் தலைவர் ஜி.கே.மணியின் மகன் தமிழ் குமரனை இயக்க வளர்ச்சிக்கு பயன்படுத்திக்கொள்ள சொன்னேன். தமிழ் குமரனுக்கு நியமன கடிதம் வழங்கினேன் அதை உடனே கிழித்து போட்டுவிட்டு, பதவியை ராஜினாமா செய் என அன்புமணி தொலைபேசியில் கூறியுள்ளார்.
கட்சியின் பொது குழுவில் பங்கேற்க மனைவி மற்றும் குழந்தைகளுடன் வந்த தமிழ் குமரனை, அந்த கூட்டத்தில் பங்கேற்க கூடாது என காலை எனக்கு அலைபேசியில் கூப்பிட்டு அன்புமணி பேசினார். இதை கேட்டு அந்த குடும்பம் எவ்வளவு கலங்கி அவமானப்பட்டு இருக்கும்? மேடையில் அல்ல, எதிர் வரிசையில் ஒரு ஓரமாக தமிழ் குமரனை அமர வைக்க கூட அன்புமணி அனுமதிக்கவில்லை என்றவர், தமிழ் குமரனுக்கு நடந்த அதே செயல், முகுந்தனுக்கு பொதுக்குழு மேடையிலேயே நடந்தது என்றார்.
அனைவரும் பெற்ற தாயை கடவுள் என்போம். இந்தாண்டு பொங்கல் சமயத்தில் குடும்பத்துடன் அனைவரும் வீட்டில் அமர்ந்து பேசிக் கொண்டிருக்கும்போது உனது இரண்டாவது மகளை இளைஞர் அணி தலைவராக்கி இருந்தால் நீ சும்மா தானே இருந்திருப்பாய்? என அன்புமணியின் தாயார் கேட்டபோது, அமர்ந்திருந்த இடத்தில் இருந்த பாட்டிலை தூக்கி பெற்ற தாயின் மீது வீசியவர் அன்புமணி நல்ல வேலையாக அது அவரின் மேல் படாது சுவற்றில் பட்டது.
இதெல்லாம் வெறும் சேம்பிள் தான். கட்சியின் நிர்வாக குழுவில் 19 பேர் உள்ளனர். அன்புமணி, அவர்களது கருத்தை கேட்பதும் இல்லை. கருத்தை வெளிப்படுத்தவும் அனுமதிப்பதில்லை
கட்சியை வைத்துக்கொண்டு, தவறான ஆட்டத்தை அடித்து ஆடியது அன்புமணி தான் போகிற போக்கில் சொல்லிவிட்டு போகவில்லை என்று கூறிய ராமதாஸ், புதுச்சேரியில் நடைப்பெற்ற பொதுக்கூட்டத்தில் மேடை நாகரிகமே இல்லாமல் நடந்துகொண்டது யார்? எல்லாவற்றிக்கும் என்னிடம் ஆதாரம் உள்ளது,

வளர்த்த கடா என் மார்பில் எட்டி உதைப்பது போல அன்புமணி என் மார்பில் பயந்துவிட்டார் என்றார்.
ஜி.கே.மணியின் மகன் தமிழ்க்குமரனின் நியமனத்தை அன்புமணி கிழித்து போட்டார்.
முகுந்தன் விவகாரத்தில் தனது தாய் மீது பாட்டிலை வீசி அன்புமணி தாக்கினார்.
அன்புமணி இன்னும் பக்குவப்படவில்லை என்று கூறிய ராமதாஸ் , மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் 8 பேர் மட்டுமே கலந்து கொண்டபோதே நான் செத்துப் போய்விட்டேன். எனது தலைமையில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க கூடாது என நிர்வாகிகளை தடுத்துவிட்டார் என்றார்.
தொடர்ந்து பேசிய டாக்டர் ராமதாஸ், 2024 மக்களவை தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி வைக்க வேண்டும் என அன்புமணிக்கு கடிதம் எழுதினேன். அதில், பாமக கூட்டணி குறித்து எடப்பாடி பழனிச்சாமியுடன் பேச சொன்னேன் ஆனால் , அவர் நான் சொன்னதை கேட்கவில்லை. அவர் பாஜகவுடன் கூட்டணி வைத்தார், பாஜகவுடன் கூட்டணி வைக்க வேண்டும் என அன்புமணி எனது ஒரு காலையும் செளமியா ஒரு காலையும் பிடித்து அழுதனர். பாஜகவுடன் கூட்டணி வைக்க வேண்டும் என அன்புமணி எனது ஒரு காலையும் செளமியா ஒரு காலையும் பிடித்து அழுதனர் என்று குற்றம் சாட்டியவர், அதிமுகவுடன் கூட்டணி வைத்திருந்தால் 6 அல்லது 7 இடங்களில் வெற்றி கிடைத்திருக்கும் என்றார்.
பாமக தலைவராக இருந்த ஜி.கே.மணியை கூட நீக்க வேண்டும் என்று சௌமியா அன்புமணி வந்து சொன்னார். இதை ஜி.கே.மணியிடம் சொன்னேன். பின்னர் ஒன்றரை மாதம் கழித்து அன்புமணிக்கு பட்டாபிஷேகம் நடத்தினேன்.
பாமக மூத்த நிர்வாகிகளை அன்புமணி மரியாதை குறைவாகவே நடத்தி வந்தார் குறிப்பாக மறைந்த காடுவெட்டி குருவை கூட அவர் உரிய மரியாதை உடன் நடத்தவில்லை.
இவ்வாறு டாக்டர் ராமதாஸ் தனது மகன் அன்புமணிமீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுக்களை சுமத்தி உள்ளார். இதன் காரணமாக பாமகவில் குழப்பம் நிலவி வருகிறது. கட்சி இரண்டாக உடையுமா அல்லது அடியோடு அழிந்துபோகுமா என்பது கேள்விக்குறியாகி வருகிறது.
அதிகார மமதையுத் அன்புமணி செயல்படுவதாக அவரது தந்தையான ராமதாசே கூறியிருப்பது பாமகவினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.