சென்னை; வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்துள்ள நிலையில், சென்னை, கடலூர், நாகை உள்ளிட்ட 7 துறைமுகங்களில் 3ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே தொடங்கி உள்ள நிலையில், மாநிலம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. அத்துடன் கேரளா மற்றும் கர்நாடகாவில் கனத்த மழை கொட்டி, மக்களின் இயல்பு நிலை பாதிக்கப்பட்டு உள்ளது.
இந்த நிலையில், வடமேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக் கடலில் கடந்த 20ந்தேதி உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. இது ஒடிஸா கடலோரப் பகுதிகளையொட்டி இருந்து மெதுவாக வடக்கு திசையில் நகா்ந்து, மேற்கு வங்கம் மற்றும் அதனை ஒட்டிய வங்கதேச கடற்கரை பகுதிகளில் வடமேற்கு வங்கக்கடலில் மையம் கொண்டுள்ளது.
இந்த காற்றழுத்த தாழ்வு பகுதியான, வடக்கு திசையில் நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக இன்று வலுவடைய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக, தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக் கடல் பகுதிகளில் சூறாவளிக் காற்று வீசுக்கூடும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும், கேரளம், கர்நாடகம் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலையையொட்டிய தமிழக மாவட்டங்களில் தென்மேற்கு பருவமழை தீவிரமடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாகியுள்ள நிலையில், சென்நை, கடலூர், நாகை, எண்ணூர், காட்டுப்பள்ளி, புதுச்சேரி, காரைக்கால் ஆகிய 7 துரைமுகங்களில் 1 ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. இதேபோன்று பாம்பன், தூத்துக்குடி துறைமுகங்களில் 3 ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது.