புதுச்சேரி
நாடெங்கும் கொரோனா பரவி வரும் நிலையில் முக்க்கவசம் அணிவது கட்டாயமில்லை என மத்திய சுகாதாரத்துறை இணையமைச்சர் கூறியுள்ளார்.

வரும் ஜுன் 21 ஆம் தேதி சர்வதேச யோகா தின விழா கொண்டாடப்பட உள்ள நிலையில் அதன் 25 நாள் முன்னோட்ட நிகழ்ச்சி மத்திய ஆயுஷ் அமைச்சகம் சார்பில் புதுச்சேரி கடற்கரை சாலையில் உள்ள காந்தி திடலில் நடைபெற்றது. மத்திய ஆயுஷ் மற்றும் சுகாதாரத்துறை இணையமைச்சர் பிரதாப்ராவ் ஜாதவ், துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன், முதலமைச்சர் ரங்கசாமி ஆகியோர் விழாவை குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தனர்.
அப்போது இணையமைச்சர் பிரதாப்ராவ் ஜாதவ் செய்தியாளர்களிடம்,
“கொரோனா பரவல் தடுப்பிற்கான அனைத்து முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை மத்திய அரசு செய்துள்ளது. மேலும் தற்போதைய சூழ்நிலையில் முக கவசம் கட்டாயமில்லை. கொரோனா தொற்றை பொருத்து அந்தந்த மாநிலங்களும் அவர்களது மாநிலத்திற்கு ஏற்ப பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்து கொள்ளலாம்’
எனத் தெரிவித்துள்ளார்