சென்னை: முதலமைச்சர் ஸ்டாலின் தொகுதியான சென்னை கொளத்தூர் தொகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில்  முதலமைச்சர் ஸ்டாலின் மாற்றுத்திறனாளி பெண் ஒருவருக்கு ஓதுவார் பணிக்கான பணியானையை வழங்கினார்.

கொளத்தூர் ஜிகேஎம் காலனியில் உள்ள மைதானத்தில் இன்று நடைபெற்ற  நிகழ்ச்சியில், அங்கு செயல்படுத்தப்பட்ட வரும், அனிதா அச்சீவர்ஸ் அகாடமியில் பயின்ற 131 மாணவர்களுக்கு முதல்வர் மடிக்கணினி  150 மாற்றுத் திறனாளிகளுக்கு ஸ்கூட்டர்கள் மற்றும் , ஏராளமான பெண்களக்கு  பெண்களுக்கு தையல் இயந்திரங்களும் வழங்கினார்.

இதைத்தொடர்ந்து அறநிலையத்துறை சார்பில், ஓதுவார் பணிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள மாற்றுத்திறநாளி பெண் பிரியவர்தனாவுக்கு,  கோவிலில் பணியாற்றுவதற்கான பணி நியமன ஆணையை முதலமைச்சர் ஸ்டாலின் வழங்கினார். அதன்படி மாற்றுத்திறனாளி   பிரியவர்தனா திருவான்மியூரில் உள்ள பாம்பன் சுவாமிகள் கோவிலில் ஒதுவார் பணியிடத்திற்கு நியமிக்கப்பட்டு உள்ளார்.