சென்னை: தமிழ்நாடு பள்ளிக்கல்வித் துறையில் முக்கிய இயக்குனர்கள் 3 பேர் அதிரடியாக  பணியிடங்கள் மாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.

கோடை விடுமுறைக்கு பிறகு ஜுன் 2ந்தேதி மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில், தமிழ்நாடு பள்ளிக்கல்வித் துறையில் 3 இயக்குநர்களை பணியிட மாற்றம் செய்து அரசு உத்தரவு பிறப்பிட்துள்ளது.

1) தனியார் பள்ளி இயக்ககத்தின் இயக்குநர் பழனிச்சாமி ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு மாற்றம் செய்யப்பட்டு உள்ளார். அவருக்குப் பதிலாக, பாடநூல் கழகச் செயலாளராகப் பணியாற்றி வந்த குப்புசாமி, புதிய தனியார் பள்ளிகள் இயக்குநராகப் பொறுப்பேற்கிறார்.

2) ஆசிரியர் தேர்வு வாரியத்தின் உறுப்பினராக இருந்த உஷா ராணி இயக்குனரான உஷாராணி தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்திற்கு பணியிட மாற்றம்.

3) பாடநூல், கல்வியியல் பணிகள் கழகத்தில் இருந்து குப்புசாமி தனியார் பள்ளி இயக்ககத்திற்கு மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.

பள்ளிக்கல்வித்துறையின் நிர்வாகச் செயல்பாடுகளை மேம்படுத்தும் நோக்கில் இந்தப் பணியிட மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.