டெல்லி
காவல்துறை பரிந்துரைப்படி டெல்லி நீதிமன்றம் பிரிஜ்பூஷன் மீதான போக்சோ வழக்கை முடித்து வைத்துள்ளது.

கடந்த 2023ம் ஆண்டு இந்திய மல்யுத்த சம்மேளன முன்னாள் தலைவரும், பாஜகவைச் சேர்ந்த உத்தரப் பிரதேச முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான பிரிஜ் பூஷன் சரண் சிங்கிற்க்கு எதிராக ஒரு சிறுமி உட்பட 7 மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் துன்புறுத்தல் புகார் அளித்திருந்தனர்.
பிரிஜ் பூஷனுக்கு எதிராக மல்யுத்த வீரர், வீராங்கனைகள் போராட்டத்தில் இறங்கினர். அதிலும் குறிப்பாக பிரபல மல்யுத்த வீரர்கள் வினேஷ் போகத் ,பஜ்ரங் புனியா உள்ளிட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டய்ஜ்ச்ச்ல் பிரிஜ் பூஷணுக்கு எதிராக இரண்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
அவற்றில் 6 வீராங்கனைகள் அளித்த பாலியல் புகார் தொடர்பான வழக்கில், டெல்லி ரௌஸ் அவென்யூ நீதிமன்றத்தில் டெல்லி காவல்துறை 15/06/2023 அன்று குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தது. இளம் வயது வீராங்கனை அளித்த புகார் தொடர்பான வழக்கில் டெல்லி பாட்டியாலா ஹவுஸ் நீதிமன்றத்தில் டெல்லி காவல்துறை சார்பில் ஒரு அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
அதில் இளம் மல்யுத்த வீராங்கனை பாலியல் துன்புறுத்தல் விவகாரத்தில், இந்திய மல்யுத்த சம்மேளன முன்னாள் தலைவர் பிரிஜ் பூஷன் சரண் சிங்கிற்கு எதிரான போக்சோ வழக்கை ரத்து செய்ய டெல்லி காவல்துறை பரிந்துரை செய்தது. இந்த குற்றச்சாட்டுகளுக்கு உறுதியான ஆதாரங்கள் எதுவும் கிடைக்கவில்லை என்று நீதிமன்றத்தில் டெல்லி காவல்துறை தனது அறிக்கையில் பரிந்துரைத்ததை ஏற்ரு நீதிமன்றம் வழக்கை முடித்து வைத்துள்ளது