சென்னை
தமிழக அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை விண்ணப்ப பதிவு இன்றுடன் நிறைவு பெறுகிறது/

தற்போது தமிழகத்தில் செயல்பட்டு வரும் 176 அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் நடப்பாண்டு மாணவர் சேர்க்கைக்கான இணைய தள விண்ணப்ப பதிவு கடந்த 7-ம் தேதி தொடங்கியது.
இளங்கலை படிப்புகளுக்கு இதுவரையில் 2 லட்சத்து 15 ஆயிரத்து 809 மாணவ, மாணவிகள் விண்ணப்பித்துள்ளனர். கல்லூரி கல்வி இயக்ககம் மாணவர்கள், www.tngasa.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என தெறிவித்துள்ளது.
ஏற்கனவே அறிவித்த படி அரசு கலை, அறிவியல் படிப்பு மாணவர் சேர்க்கை விண்ணப்ப பதிவு இன்றுடன் நிறைவடைய உள்ளது. ஆயினும் விண்ணப்பிக்க, கால அவகாசம் நீட்டிக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகி உள்ளன.
Patrikai.com official YouTube Channel