ஸ்காட்லாந்து நாட்டைச் சேர்ந்த பிரபல யூடியூபர் கல்லம் மில் கடந்த மார்ச் மாதம் பதிவேற்றிய வீடியோ ஒன்று தற்போது வைரலாகி உள்ளது.
பாகிஸ்தானுக்கு உளவு பார்த்ததாகவும் அவர்களுக்கு கைக்கூலியாக செயல்பட்டதாகவும் பஞ்சாப், ஹரியானா மற்றும் உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதில் ஹரியானா மாநிலம் ஹிசாரைச் சேர்ந்த யூடியூபர் ஜோதி மல்ஹோத்ரா பாகிஸ்தான் உளவுத்துறையின் ஒரு சொத்தாக இந்தியாவில் செயல்பட்டு வந்ததாகவும் அவர் பாகிஸ்தான், சீனா, பங்களாதேஷ், இந்தோனேசியா மற்றும் வேறு சில நாடுகளுக்குச் சென்றிருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் ஸ்காட்டிஷ் யூடியூபர் கல்லம் மில் பதிவேற்றிய ‘இந்தியப் பெண் பாகிஸ்தானை முற்றிலும் நேசிக்கிறார்’ (Indian Girl Absolutely loving Pakistan) என்ற ஷார்ட்ஸ் வீடியோவில் ஜோதி மல்ஹோத்ரா AK-47 துப்பாக்கி வைத்திருந்த 6 ஆண்களுடன் பாதுகாப்பாக பாகிஸ்தான் தெருக்களில் நடந்து செல்வது பதிவாகியிருந்தது.
மேலும், பாகிஸ்தான் ஜிந்தாபாத் என்று கூறிய கல்லம் மில் லாஹூரில் உள்ள அனார்கலி பஜாரில் ஜோதி மல்ஹோத்ரா-வை பின்தொடர்ந்து வீடியோ பதிவு செய்துள்ளார், அவரின் இந்த வீடியோ மற்ற வீடியோக்களை விட பலமடங்கு அதிக பார்வையாளர்களை சென்று சேர்ந்துள்ளது.
இந்த வீடியோ தற்போது வைரலான நிலையில் ஒரு சாதாரண யூடியூபருக்கு ஏன் இவ்வளவு AK-47 துப்பாக்கி ஏந்திய பாதுகாப்பு இருந்தது? என்று சமூகவலைத்தளத்தில் கேள்வி எழுப்பப்பட்டு வருவதுடன் இந்த விசாரணை ஸ்காட்லாந்து வரை தற்போது நீண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
பாகிஸ்தானுக்காக உளவு பார்த்ததாக சிஆர்பிஎஃப் அதிகாரி டெல்லியில் கைது… என்ஐஏ நடவடிக்கை…