திருச்சி
திருச்சி – ராமேஸ்வரம் இடையே ரயில் சேவையில் மாற்றம் அறிவிக்கப்பட்டுள்ளது/

திருச்சி ரயில்வே கோட்ட அலுவலகம்.
”திருச்சி ரெயில்வே கோட்டத்தின் திருவாரூர் மற்றும் கீழலூர் பிரிவுக்கு இடையே பொறியியல் பணிகள் நடைபெறுவதால் அந்த வழியாக இயங்கும் ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இன்று (திங்கட்கிழமை), வருகிற 28, 29, 30, 31, மற்றும் அடுத்த மாதம் 1-ந்தேதிகளில் திருச்சியில் இருந்து காலை 8.35 மணிக்கு புறப்படும் திருச்சி – காரைக்கால் டெமு ரயில் (வண்டி எண் 76820) திருவாரூர் வரை மட்டுமே இயங்கும்.
இன்று (திங்கட்கிழமை), 28, 29, 30, 31-ந் தேதி, அடுத்த மாதம் 1-ந்தேதி ஆகிய நாட்களில் காரைக்காலில் இருந்து மதியம் 2.55 மணிக்கு புறப்படும் காரைக்கால் – திருச்சி டெமு ரயில் (வண்டி எண் 76819) காரைக்கால் – திருவாரூர் இடையே பகுதியாக ரத்து செய்யப்பட்டு திருவாரூரில் இருந்து மாலை 4.15 மணிக்கு புறப்பட்டு திருச்சிக்கு வந்தடையும்”
என்று தெரிவித்துள்ளது.