சென்னை: அரசு  நிலம் ஆக்கிரமிப்பு தொடர்பான  அமைச்சர் மா. சுப்பிரமணியம் மீதான வழக்கு வேறு நீதிபதிக்கு மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.  இன்று குற்றச்சாட்டு பதிவு செய்யப்படும் என நீதிபதி அறிவித்திருந்த நிலையில், வழக்கு வேறு நீதிபதிக்கு மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.

அரசுக்கு சொந்த சிட்கோ நகர் நிலத்தை, தனது அதிகாரத்தை பயன்படுத்தி அமைச்சர் மா.சுப்பிரமணியம்,   தனது மனைவி பெயருக்கு மாற்றி முறைகேட்டில் ஈடுபட்டதாக தொடரப்பட்ட வழக்கை விசாரித்து வந்த  நீதிபதி பிரபாகரன், வழக்கின் விசாரணைக்கு ஆஜராக அமைச்சருக்கு அறிவுறுத்தி இருந்தார். ஆனால், அமைச்சர் நீதி மன்றத்தில் ஆஜராகாத நிலையில், 23ந்தேதி விசாரணைக்கு ஆஜராக வேண்டும் இல்லையேல், குற்றச்சாட்டு பதிவு செய்யப்படும் என கடுமையாக எச்சரித்து இருந்தார்.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வர இருந்த நிலையில், வழக்கை வேறு நீதிபதிக்கு மாற்றி உயர்நீதிமன்ற பதிவாளர் உத்தரவிட்டு உள்ளார். அதனப்டி,  நீதிபதி வேங்கடவரதன் அமர்வுக்கு மாற்றப்பட்டுள்ளது.  வழக்கு,  வேறு நீதிபதிக்கு மாற்றப்பட்டதால் வழக்கு விசாரணை ஜூன். 17-க்கு ஒத்தி வைக்கப்பட்டது.

அரசு நிலம் அபகரிப்பு: 23ந்தேதி விசாரணைக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆஜராக நீதிமன்றம் உத்தரவு…

போலி ஆவனங்கள் மூலம் நிலம் அபகரிப்பு வழக்கு: அமைச்சர் மா.சுப்பிரமணியன் மனு தள்ளுபடி!