டெல்லி: ஏவுகணை சோதனை மற்றும் ராணுவ பயிற்சிக்காக வங்காள விரிகுடா மற்றும் அந்தமான் நிகோபார் தீவுகளைச் சுற்றியுள்ள வான் பகுதிகளில் இன்றும் நாளையும் (மே 23-24 தேதி) தடை செய்யப்படுவதாக இந்தியா அறிவித்துள்ளது.

இந்த பகுதியில் விமானம் உள்பட எந்தவொரு பொருளும் பற்கக தடை விதிக்கப்பட்டு, வான்வெளியை மூடுவதாக இந்தியா அறிவித்துள்ளது. அதன்படி, அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் மீதான இந்திய வான்வெளி மே 23-24 ஆகிய தேதிகளில் மூடப்பட்டது
இன்று மற்றும் நாளை தினங்களில் திட்டமிட்ட நடவடிக்கைகளுக்காக அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் மீதான தற்காலிக வான்வெளி மூடப்படுவதாக இந்தியா அறிவித்துள்ளது. இந்த காலகட்டத்தில் பொதுமக்கள் விமானங்களை தடை செய்யும் சமீபத்திய NOTAM, இராணுவப் பயிற்சிகள் அல்லது ஆயுதச் சோதனைகள் நடத்தப்படலாம் என்ற ஊகங்களுக்கு வழிவகுக்கிறது.
இதுதொடர்பாக, அதிகாரிகள் சமீபத்தில் விமானப்படை வீரர்களுக்கு (NOTAM) அனுப்பிய அறிவிப்பை இந்த அறிக்கை மேற்கோள் காட்டி செய்திகள் வெளியாகி உள்ளன. மே 16 அன்று மாலை வெளியிடப்பட்ட NOTAM, “இந்த காலகட்டத்தில் எந்த உயரத்திலும் நியமிக்கப்பட்ட வான்வெளியில் எந்த சிவிலியன் விமானமும் இயக்க அனுமதிக்கப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த காலக்கட்டத்தில், குறிப்பிட்ட பகுதிகளில், ஏவுகணை அல்லது ஆயுத அமைப்பு சோதனையுடன் தொடர்புடையதாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.