சென்னை: 3,935  அரசு காலி பணியிடங்களுக்கான குரூப்-4 தேர்வுக்கு  விண்ணப்பிக்க நாளை (மே 24) கடைசி நாள். இதுவரை விண்ணப்பிக்காதவர்கள் நாளைக்குள் விண்ணப்பித்துக் கொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

விஏஓ, இளநிலை உதவியாளர், தட்டச்சர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளில் 3,935 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு; குரூப்-4 தேர்வுக்கு தகுதியானவர்கள் www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் . மொத்தம் 2925 காலி பணியிடங்கள். டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்னும் ஒரு நாள் தான் அவகாசம் உள்ளது. நாளையுடன் அவகாசம் முடிவடைகிறது.

முன்னதாக,  கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர், வனக்காப்பாளர் மற்றும் வனக்காவலர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளுக்கான 3935 காலிப்பணியிடங்களை நிரப்ப குரூப் 4 தேர்வு அறிவிக்கப்பட்டது. இந்த தேர்வுக்கு  ஆன்லைன் விண்ணப்பம் கடந்த ஏப்ரல் மாதம் 25ம் தேதி முதல்  நடைபெற்று வருகிறது. இதற்கான அவகாசம் , நாளை மே 24ம் தேதி கடைசி தேதியுடன் முடிவடைகிறது.

விண்ணப்பதாரர்கள் தேர்வாணைய இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம்.

தமிழக அரசில் இருக்கும் பல்வேறு பதவிகளில் குரூப் 4 தேர்வு அதிக பேர் எழுதும் தேர்வாக உள்ளது. ஒரே கட்ட தேர்வு, 10-ம் வகுப்பு தகுதி போதும் என்பதால் ஒவ்வொரு ஆண்டும் இத்தேர்வை லட்சக்கணக்கில் எழுதி வருகின்றனர்.கிராம நிர்வாக அலுவலர் பதவிக்கு குறைந்தபட்சம் 21 முதல் அதிகபடியாக 42 வரை இருக்க வேண்டும். வனக் காப்பாளர், ஓட்டுநர் உரிமத்துடன் கூடிய வனக் காப்பாளர், வனக் காவலர் உள்ளிட்ட பதவிகளுக்கு குறைந்தபட்சம் 21 முதல் அதிகபடியாக 37 வரை இருக்கலாம். இதர பதவிகளுக்கு 18 முதல் 34 வரை இருக்கலாம். வயது வரம்பில் தளர்வு உள்ளது. குரூப் 4 தேர்வு ஒரே கட்ட தேர்வாகும். கட் ஆப் மதிப்பெண்கள் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டவர்கள் பட்டியல் வெளியிடப்படும். நேர்முகத்தேர்வு எதுவும் கிடையாது.

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்விற்கு https://www.tnpsc.gov.in/ என்ற இணையதளத்தில் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்க வேண்டும். தேர்வர்கள் இணையதளம் வழியாக பதிவு செய்து பின்னர் தேர்விற்கு விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பக் கட்டணமாக ரூ.100 செலுத்த வேண்டும். இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்க நாளை (மே 24) கடைசி நாளாகும். இதுவரையில் விண்ணப்பிக்காத விண்ணப்பதாரர்கள் உடனடியாக விண்ணப்பிக்க அறிவுறுத்தப்படுகிறது.