ஹார்வர்ட் பலக்லைக்கழகத்தில் மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் பரிமாற்ற திட்டதுக்கு (Student and Exchange Visitor Program – SEVP) தற்காலிக தடை விதித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார்.
மேலும், அந்த பல்கலைக்கழகத்தில் பதிவு செய்துள்ள 6800 வெளிநாட்டு மாணவர்களும் உடனடியாக மாணவர் பரிமாற்ற திட்டம் மூலம் அமெரிக்காவில் உள்ள வேறு பல்கலைக் கழங்கங்களுக்கு இடம்மாற அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

தவிர, கடந்த ஐந்து ஆண்டுகளில் ஹார்வர்ட் பலக்லைக்கழக வளாகத்தில் மட்டுமன்றி வெளியிலும் சட்டவிரோத நடவடிக்கைகள், வன்முறை மற்றும் சக மாணவர்களை தாக்குவது மற்றும் போராட்டங்களில் ஈடுபட்ட வெளிநாட்டு மாணவர்கள் குறித்த விவரங்களை 72 மணி நேரத்துக்குள் பல்கலைக்கழக நிர்வாகம் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.
அப்படி இந்த மாணவர்கள் வேறு பல்கலைக்கழங்களுக்கு இடம்மாறவில்லை என்றாலும் மாணவர்கள் குறித்த விவரங்களை நிர்வாகம் தரவில்லை என்றாலும் அவர்கள் சொந்த நாடுகளுக்கு நாடு கடத்தப்படுவார்கள் என்று எச்சரித்துள்ளது.
ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் மட்டும் சுமார் 800 இந்திய மாணவர்கள் கல்வி பயின்று வரும் நிலையில் அமெரிக்க அதிபர் டிரமபின் இந்த அதிரடி உத்தரவால் அவர்களின் நிலை கேள்விக்குறியாகி உள்ளது.