ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் டாக்சியில் பயணம் செய்த பெண்ணுக்கு மயக்கமருந்து கொடுத்து கற்பழித்ததாக எழுந்த புகாரில் 54 வயது டாக்சி ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளார்.

தனது காரில் ஏறிய பெண்ணுக்கு தூக்க மருந்து கொடுத்த அந்த ஓட்டுநர் அப்பெண் மயங்கியதும் தனது வீட்டுக்குக் கூட்டிச் சென்று கற்பழித்ததோடு அதை வீடியோவாகவும் படம் பிடித்து வைத்துள்ளார்.

இதுகுறித்து அந்த பெண் அளித்த புகாரை அடுத்து மேற்கொண்ட விசாரணையில் அந்த பெண்ணின் தலைமுடியில் தூக்க மாத்திரைகளின் தடயங்கள் இருந்தது உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து ஓட்டுனரை கைது செய்து விசாரித்த போலீசார் அவரிடம் இருந்த மொபைல் போனில் சுமார் 3000க்கும் மேற்பட்ட வீடியோக்கள் இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

மேலும் விசாரணையில் அவர் 2008ம் ஆண்டு முதல் இதுபோன்ற நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதும் இதுவரை அவர் சுமார் 50க்கும் மேற்பட்ட பெண்களை மயக்கமருந்து கொடுத்து பாலியல் பலாத்காரம் செய்ததும் தெரியவந்துள்ளது.