சென்னை: ரூ.1000 கோடி முறைகேடு தொடர்பான அமலாக்கத்துறையின்  டாஸ்மாக் வழக்கு விசாரணைக்கு  உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளதற்கு திமுக, காங்கிரஸ் கட்சி வரவேற்பு தெரிவித்துள்ளது.

டாஸ்மாக் சோதனை மற்றும் விசாரணையை எதிர்த்து தமிழ்நாடு அரசு தாக்கல் செய்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், அமலாக்கத்துறை எல்லை மீறுவதாக கண்டித்ததுடன், அமலாக்கத்துறையின் விசாரணைக்கு தடை விதித்து உத்தரவிட்டது.

உச்சநீதிமன்றத்தின் இந்த விசாரணைக்கு திமுக, காங்கிரஸ் வரவேற்பு தெரிவித்துள்ளது.

ஆர்.எஸ்.பாரதி ,

இந்த தடை உத்தரவு குறித்து கருத்து தெரிவித்து, தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி , இந்த வழக்கு,  திட்டமிட்டு அரசியல் லாபத்திற்காக தொடரப்பட்ட வழக்கு. இந்த வழக்கு தொடர்பான அமலாக்கத்துறையின்  விசாரணைக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது. தி.மு.கவின் நியாயமான கோரிக்கையை ஏற்று அமலாக்கத்துறை விசாரணைக்கு தடை விதித்த உச்சநீதிமன்றம் உத்தரவை வரவேற்கிறோம் என தெரிவித்துள்ளார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் செல்வாக்கு உயர்ந்து வருவதை பொறுக்காமல் அரசுக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் பாஜக தலைவர்கள் பேசி வந்தனர். அதற்கு சம்மட்டி அடி தரும் வகையில் இந்த தீர்ப்பு அமைந்துள்ளது. எங்களது அனைத்து முடிவுகள் நியாயமானது என்பதற்கு உச்சநீதிமன்ற தீர்ப்பு ஒரு அங்கீகாரம். அமலாக்கத் துறையின் அக்கப் போர்களுக்கு இந்த தீர்ப்பு முடிவு கட்டியுள்ளது.

இனிமேலாவது ஒன்றிய அரசு அமலாக்கத்துறையை தவறாக பயன்படுத்துவதை கைவிட வேண்டும். உச்சநீதிமன்ற தீர்ப்பால் டாஸ்மாக் வழக்கில் அமலாக்கத்துறையால் தலையிட முடியாது.”

இவ்வாறு தெரிவித்தார்.

செல்வபெருந்தகை

டாஸ்மாக் வழக்கில் விசாரணைக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்தது குறித்து கருத்து தெரிவித்துள்ள தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வபெருந்தகை,  இது  அமலாக்கத்துறைக்கு கிடைத்த சம்மட்டி அடி என கூறினார்.

மேலும், பா.ஜ.க. ஆளாத மாநிலங்களில் மிரட்டும் அமைப்பாக அமலாக்கத்துறை செயல்படுகிறது என்று கூறியவர்,  டாஸ்மாக் நிறுவனம் மீதான அமலாக்கத்துறை யின் வழக்கு என்பது பழிவாங்கும் நடவடிக்கை என்றவர்,   அமலாக்கத்துறை வரம்புமீறி செயல்படுவதால் தான் டாஸ்மாக் வழகில் விசாரணைக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது. பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் சோதனைகள் கிடையாது, கைது கிடையாது, அமைச்சர்கள் மீது வழக்குகள் கிடையாது.

பாட்டிலுக்கு 10 ரூபாய் அதிகம் வாங்கினால் யார் வாங்கினார்களோ அவர்களை சென்று விசாரியுங்கள். யாருக்கு மோசடியில் தொடர்பு உள்ளதோ அவர்களை விடுத்து அனைத்து அதிகாரிகளையும் விசாரிப்பது ஏற்கத்தக்கது அல்ல.

இவ்வாறு கூறினார்.

வரம்பை மீறுகிறது இடி: ரூ.1000 கோடி முறைகேடு: அமலாக்கத்துறையின் டாஸ்மாக் விசாரணைக்கு உச்சநீதிமன்றம் தடை…