கோபி
கோபிசெட்டிபாளையம் அருகே 10000 நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேத அடைந்துள்ளன,

தற்போது தமிழல்ச், மற்றும் அதனை ஒட்டிய வடக்கு கேரள பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதால் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதனால் செங்கல்பட்டு, திருவள்ளூர், புதுக்கோட்டை உமற்றும் குறிப்1பாக, ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த 4 நாட்களாக மழை கொட்டி தீர்த்தது.. கோபிச்செட்டிப்பாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேற்று இரவு கனமழை பெய்ததால், கொள்முதல் நிலையங்களில் வைக்கப்பட்டிருந்த 10,000க்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்து நாசமானது.
அவற்றில் உள்ள நெல் பயிர்கள் முளைத்து வீணாகி வருவதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். விவசாயிகள் நெல் கொள்முதல் நிலையங்களில் தார்பாய் போன்ற எந்த வசதிகளும் ஏற்படுத்தி தருவதில்லை எனவும் விவசாயிகளிடம் நெல் கொள்முதல் செய்யாமல் காலம் தாழ்த்தப்படுவதாகவும் குற்றச்சாட்டியுள்ளனர்.