சென்னை
தவெக தலைவர் விஜய் தமது கட்சி பணியை விரைந்து முடிக்க வலியுறுத்தி உள்ளார்.

இன்று கூட்டம் சென்னை பனையூரில் உள்ள தமிழக வெற்றிக்கழக கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் தவெக தலைவர் விஜய் பங்கேற்கவில்லை மாறாக பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் தலைமை தாங்கினார். கூட்டத்தில் நிர்வாக ரீதியான 120 மாவட்டங்களை சேர்ந்த செயலாளர்கள் பங்கேற்றனர்.
சட்டசபை தேர்தல் வியூகம் குறித்து விவாதிக்கப்பட்ட கூட்டத்தில். பூத் கமிட்டி மாநாடு தொடர்பாகவு, மாவட்ட செயலாளர்களிடம் கருத்து கேட்கப்பட்டு, முடிவுகள் எடுக்கப்பட்டன. மேலும் மாவட்ட அளவில் கட்சியின் வளர்ச்சி பணிகள், மக்கள் ஆதரவு குறித்து மாவட்ட செயலாளர்கள் தெரிவித்தனர். இதன் அடிப்படையில் ஆய்வறிக்கை தயாரிக்கப்பட்டு கட்சி தலைவர் விஜய்யிடம் ஒப்படைக்கப்பட உள்ளது. கூட்டத்தில் விஜய் பங்கேற்காததால் பொதுச்செயலாளர் ஆனந்திடம் நிர்வாகிகளுக்கு முக்கிய உத்தரவுகளை பிறப்பித்துள்ளார்.
விஜய்,
”மே மாதத்துக்குள் கட்சியின் கட்டமைப்பு பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். மாவட்டம் மற்றும் ஒன்றிய அளவில் உள்ள சார்பு அணி நிர்வாகிகளை நியமனம் செய்ய வேண்டும். 3.5 லட்சம் கட்சி பொறுப்பாளர்கள் மற்றும் 70 ஆயிரம் பூக் கமிட்டி பொறுப்பாளர்களை நியமிக்க வேண்டும்”
என உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
[youtube-feed feed=1]