திண்டிவனம்: பாமகவில் தந்தை மகனுக்கு இடையே மோதல் போக்கு நீடித்து வரும் நிலையில், இன்று நடைபெற்ற பாமக மாவட்டச்செயலாளர்களின் அவசர அலோசனை கூட்டத்தில் பேசிய பாமக தலைவர் ராமதாஸ் அன்புமணி செயல் தலைவர் தான், கட்சியின் தலைவர் இல்லை என்பதை மீண்டும் தெளிவுபடுத்தி உள்ளார். இந்த கூட்டத்தை அன்புமணி ராமதாஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் புறக்கணித்துள்ளதாக கூறப்படுகிறது.

பாட்டாளி மக்கள் கட்சியில், தந்த மகனுக்கு இடையே மோதல் போக்கு நீடித்து வருகிறது. இதன் தாக்கம்  2024ம் ஆண்டு  டிசம்பர் 28 ஆம் தேதி அன்று  நடைபெற்ற பாட்டாளி மக்கள் கட்சியில் சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில் பகிரங்கமாக வெடித்தது. இந்த கூட்டத்தில், தன்னுடைய மகள் வழி பேரனான முகுந்தன் பரசுராமனை கட்சியின் இளைஞரணி தலைவராக அறிவித்த ராமதாஸ், இவர்எ “அன்புமணிக்கு இருப்பார்” என கூறினார். இதனால், அதிருப்தி அடைந்த அன்புமணி, அதே மேடையிலேயே,    “யாருக்கு? எனக்கா?” என கேட்டு அந்த மேடையிலேயே முகுந்தன் நியமனத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தார். இதை ராமதாஸ் கோபமாக கண்டித்தார்.  மேலும்,  “கட்சியில் யாராக இருந்தாலும் நான் சொல்வதைக் கேட்க வேண்டும். அவ்வாறு கேட்கவில்லையென்றால் கட்சியிலேயே நீடிக்க முடியாது” என கூறினார். இது பாமக தொண்டர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதைத்தொடர்ந்து, பாமக தலைவர் பதவியில் இருந்து அன்புமணியை நீக்கிய ராமதாஸ், தானே கட்சி தலைவர் என்றும், அன்புமணி செயல்தலைவர் என்றும் அறிவித்தார். இதைத்தொடர்ந்து,  நான் தான் தலைவர் என, ராமதாஸும் அன்புமணி ராமதாஸும் மாறி மாறி கூறி வருகின்றனர். இது கட்சியினரிடையே சலசலப்பை ஏற்படுத்திய நிலையில்,  இது எங்கள் கட்சியின் உட்கட்சி விவகாரம் என விளக்கம் அளித்தார் அன்புமணி ராமதாஸ்.

இதற்கிடையில்,  12 ஆண்டுகளுக்குப் பின் பாமக சார்பில் நடத்தப்பட உள்ளி மாமல்லபுரம் சித்திரை முழுநிலவுத் திருவிழா சிறப்பாக நடைபெற்றது. இருந்தாலும், இந்த நிகழ்ச்சியிலும் தந்தை மகனுக்கு இடையேயான போர் தொடர்ந்தது.

இந்த பரபரப்புக்கு மத்தியில், இன்று பாமக அவசர மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என பாமக நிறுவனர் ராமதாசால் அறிவிக்கப்பட்டது. இதில் அன்புமணி கலந்து கோள்வாரா என கேள்வி எழுந்தது. முன்னதாக  செய்தியாளர்களிடம் பேசிய ராமதாஸ் அப்போது அன்புமணியை செயல் தலைவர் என குறிப்பிட்டு பேசினார்.  செயல் தலைவர் அன்புமணிக்கு முறையான அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது என்றும் செயல் தலைவர் அன்புமணி மாவட்ட செயலாளர் கூட்டத்திற்கு வரலாம், வந்து கொண்டிருக்கலாம் என்றும் தெரிவித்தார்.

இந்த நிலையில், தைலாபுரம் தோட்டத்தில், இன்று காலை  பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில்  பாமகவின் மாவட்ட செயலாளர்கள் அவசர ஆலோசனைக் கூட்டம் சொற்ப உறுப்பினர்களுடன் தொடங்கியது. பாமக எம்எல்ஏவும், சட்டமன்ற கட்சி தலைவருமான ஜி.கே.மணி உள்பட சிலர் மட்டுமே இந்த கூட்டத்தில் பங்கேற்றுள்ளதாக கூறப்படுகிறது.

அதாவது,    சுமார் 15 பேர் மட்டுமே இந்த பாமக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் பங்கேற்றுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.  பாமக நிறுவனர் ராமதாஸ் அழைப்பு விடுத்த ஆலோசனை கூட்டத்திற்கு 7 மாவட்டத் தலைவர்கள், 8 மாவட்டச் செயலாளர்கள் மட்டுமே வருகை; தலைவர் அன்புமணியும் இதுவரை பங்கேற்கவில்லை தலா 108 மாவட்டத் தலைவர்கள், செயலாளர்கள் உள்ள நிலையில் பெரும்பாலானோர் பங்கேற்கவில்லை. அன்புமணியின் ஆதரவாளர்கள் இந்த கூட்டத்தை புறக்கணித்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், கூட்டத்தில் பேசிய ராமதாஸ்,  அனைத்து தொகுதிகளிலும் படுத்து கொண்டே ஜெயிக்கும் விதையை நான் சொல்லிக் கொடுக்கப் போகிறேன் என்றவர்,  ஏற்கனவே “50 தொகுதிகளில் படுத்துக்கொண்டே ஜெயிப்பதற்கான வித்தைகளை சொல்லிக்கொடுத்தேன் 50 தொகுதிகளில் வெற்றி பெறுவதற்கான யோசனைகளை பரிமாறிக்கொள்வதற்கான கூட்டம் இது செயல்பட முடியவில்லை என யாரும் விருப்பம் தெரிவித்தால், விரும்பியபடி மாற்றப்படுவார்கள்” என்றார்.

மேலும், சிங்கத்தின் கால்கள் பழுதாகாதபோது சீற்றம் இன்னும் அதிகமாகத் தானே இருக்கும் ஆட்சியைப் பிடிக்க வேண்டுமென்றஅந்த சீற்றம், எண்ணம் அதிகமாகிக் கொண்டே இருக்கிறது” என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். ‘