ஊட்டி: தமிழ்நாட்டில் இனிமேல் திராவிட மாடல் ஆட்சி தான் என்று கூறிய முதலமைச்சர் ஸ்டாலின், 2026 மட்டுமல்ல 2031, 36 எல்லாமே தமிழ்நாட்டில் திராவிட மாடல் ஆட்சி தான் என நம்பிக்கை தெரிவித்தார்.

ஊட்டி மலர் கண்காட்சியை திறந்து வைக்க 5 நாள் பயணமாக ஊட்டி சென்றுள்ள முதலமைச்சர் ஸ்டாலின் அங்கு 127-வது மலர் கண்காட்சியை ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்தார். அப்போது மலர்களால் உருவான சிம்மாசனத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது மனைவி துர்கா ஸ்டாலிலுடன் அமர்ந்து புகைப்படம் எடுத்து மகிழ்ந்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்தபோது, ஊட்டியில் 5 நாள் பயணம் மிக சிறப்பாக இருந்தது; மகிழ்ச்சியாக இருந்தது. அதேநேரத்தில் மக்களை சந்திக்கக்கூடிய வாய்ப்பு கிடைத்தது. இதனால் திராவிட மாடல் ஆட்சிக்கு நீலகிரி மாவட்ட மக்கள் மட்டுமின்றி.. இங்கு வரும் சுற்றுலா பயணிகளான மற்ற மாவட்ட மக்களும் ஆதரவு அளித்து வருகிறார்கள் என்பது தெரிகிறது. மலர் கண்காட்சி மிகவும் சிறப்பாக இருந்தது என்றார்.
இன்று காலை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உதகை மலைப்பகுதியில் நடைபயிற்சி மேற்கொண்டார். அவருடன் நீலகிரி எம்.பி.ஆ.ராசாவும் நடைபயிற்சி செய்தார். இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், உதகை பயணம் மிக எழுச்சியாக இருந்தது.மலர்கண்காட்சி எதிர்பார்த்ததை விட சிறப்பாக இருந்தது என்றவர்,

உச்சநீதிமன்றத்தில் ஜனாதிபதி கருத்து கேட்ட விவகாரம் தொடர்பாக, மற்ற மாநில முதலமைச்சர்களுடன் கலந்து பேசி உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இந்த விவகாரத்தில் ஜனாதிபதி திரவுபதி முர்மு சுப்ரீம் கோர்ட்டிடம் விளக்கம் கேட்டது தொடர்பாக நேற்றே அறிக்கை வெளியிட்டேன், மற்ற மாநில முதல்-மந்திரிகள், மாநில தலைவர்களுடன் ஆலோசித்து, கருத்துகள் கேட்டு அதன் அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுப்போம். மத்திய அரசு தொடர்ந்து சர்வாதிகாரப் போக்கை கடைபிடிக்கிறது என்றார்.
பின்னர் செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் கூறியவர், தமிழ்நாட்டில் இனிமேல் திராவிட மாடல் ஆட்சிதான் என்றவர், 2026 மட்டுமல்ல 2031, 2036-ம் ஆண்டிலும் தமிழ்நாட்டில் திராவிட மாடல் ஆட்சிதான் நிலைத்து நிற்கும் என்றார்.