பொள்ளாச்சி: பொள்ளாச்சி அருகே டாப் சிலிப் பகுதியில் மலையேற்றத்தில் ஈடுபட்ட கேரள மருத்துவர் உயிரிழந்ததார். இது பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

தமிழ்நாட்டின் பல பகுதிகளில் மலையேற்றம் எனப்படும் டிரெங்கிங் அனுமதிக்கப்பட்டு வருகிறது. இதற்கான பதிவு செய்து, அரசு அனுமதிக்கும் கைடுடன் இளைஞர், இளைஞிகள் மலையேற்றம் செய்து வருகின்றனர். இந்த நிலையில்,  பொள்ளாச்சி அருகே மலையேற்றத்தில் ஈடுபட்ட கேரளத்தைச் சேர்ந்த மருத்துவர் மூச்சுத்திணறி பலியான நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகே டாப்ஸ்லிப்  பகுதி மலையேற்றத்துக்கு அனுமதிக்கப்பட்ட பகுதியிகும். இந்த மலைப் பகுதியில் கேரள மருத்துவர் அஜ்சல் சைன் (வயது 26) மற்றும் அவரது நண்பர்  ஃபாத்தில் (வயது 27) ஆகிய இருவரும் முறையான அனுமதி பெற்று  நேற்று (ஞாயிற்றுக்கிழமை)  காலை மலையேற்றத்தில் ஈடுபட்டனர். உடன் மலைப்பாதை வழிகாட்டிகளும் இருந்தனர்.

இவர்கள் தங்களது மலையேற்த்தை முடித்து,  மாலை 4.30 மணியளவில் மலை அடிவாரத்துக்கு திரும்பியதாகக் கூறப்படுகிறது. ஆனால் நீரிழப்பு காரணமாக அஜ்சல் மயக்கமடைந்தார். உடனே அவரை அருகே இருந்தவர்கள்,   வேட்டைக்காரன்புதூர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு  அழைத்துச் சென்றனர். அங்கு அவரை சோதனை செய்த  மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டதாக அறிவித்தனர்.  இது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதையடுத்து பொள்ளாச்சி, வனத்துறையினர் அஜ்சலின் குடும்பத்தினருக்கு தகவல் கொடுத்து, ஆனைமலை போலீஸில் புகார் அளித்தனர்.  இதையடுத்து வழக்கு பதிவு செய்த ஆனைமலை காவல்துறையினர் விசாரணை நடத்தினர்.  முதற்கட்ட விசாரணையில், பலியான அஜ்சல் சில மாதங்களாக மன அழுத்தத்திற்கு மருந்துகளை உட்கொண்டு வந்தது தெரியவந்தது. அஜ்சலின் உடற்கூராய்வு  இன்று (திங்கள்கிழமை )பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் நடைபெறுகிறது. இதில் அவர் மரணத்திற்கான காரணம் தெரிய வரும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இறந்தவர் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த அஜ்ஸல் ஏ. சைன்  என்றும்,  சைனும் அவரது நண்பர் ஃபாதில் தையிப் ராஜும் டாப் ஸ்லிப் – பண்டாரவரை – கரியன் ஷோலா – டாப் ஸ்லிப் பாதையில் மலையேற்றத்திற்கு பதிவு செய்ததாக ஏடிஆர் அதிகாரிகள் தெரிவித்தனர். இருவருடன் ஏடிஆரைச் சேர்ந்த இரண்டு அனுபவம் வாய்ந்த வழிகாட்டிகளும் இருந்தனர்.