திருவனந்தபுரம்: கேரளாவில் அமைக்கப்பட்டுள்ள விழிஞ்சம் சர்வதேச துறைமுகத்தை மாநில முதல்வர் பினராயி விஜயன் முன்னிலையில், பிரதமர் பிரதமர் மோடி திறந்து வைத்தார்.

கேரளாவின் விழிஞ்சம் பகுதியில், ரூ.8,867 கோடி செலவில் சர்வதேச துறைமுரகம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த விழிஞ்சம் சர்வதேச துறைமுகத்தை பிரதமர் மோடி இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் நாட்டுக்கு அர்ப்பணித்தார். அதிக சிறப்பம்சங்களுடன் அமைக்கப்பட்டுள்ள விழிஞ்சம் துறைமுகம் உலகளாவிய கடல்சார் வரைபடத்தில் இடம்பெற்றுள்ளது/
இந்த விழாவில் கேரள முதல்வர் பினராயி விஜய், காங்கிரஸ் எம்.பி. சசிதரூர் மற்றும் அதானி குழுமத் தலைவர் கௌதம் அதானி ஆகியோர் கலந்து கொண்டனர். அதானி பிரதமர் மோடிக்கு பரிசு வழங்கினார்.
கேரள அரசின் இந்த லட்சியத் திட்டம், அதானி துறைமுகங்கள் மற்றும் சிறப்பு பொருளாதார மண்டல லிமிடெட் (APSEZ) மூலம் பொது-தனியார் கூட்டாண்மையின் கீழ் உருவாக்கப்பட்டுள்ளது.

நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர் மோடி, “விழிஞ்சம் துறைமுகம் கேரள மக்களுக்கு புதிய பொருளாதார வாய்ப்புகளை உருவாக்கும் இந்தியாவின் கடலோர மாநிலங்கள், துறைமுக நகரங்கள் முக்கிய வளர்ச்சி மையமாக மாறும் பெரிய சரக்குக் கப்பல்களை நிறுத்த இடமளிக்கும் வகையில் துறைமுகம் வடிவமைப்பு” என்று கூறினார். மேலும், “இந்த நிகழ்வு பலரின் தூக்கத்தைக் கெடுக்கப் போகிறது” என்றும், விழிஞ்சம் துறைமுகத் திறப்பு விழாவில் காங்கிரஸ் எம்.பி. சசிதரூர் கலந்துகொண்டதை சுட்டிக்காட்டி, இந்திய தேசிய கூட்டணி குறித்து விமர்சனம் செய்தார்.
கேரள முதல்வர் பினராயி விஜயன் பேசும்போது, “கடந்த மாதம் பகல்காமில் பயங்கரவாதிகளால் கொடூரமாக கொல்லப்பட்டவர்களுக்கு அஞ்சலி செலுத்துவதன் மூலம் நான் தொடங்குகிறேன். அவர்களின் இழப்பு, தேச விரோத மற்றும் பிளவுபடுத்தும் சக்திகளிடமிருந்து நமது நாட்டைப் பாதுகாப்பதில் ஒற்றுமையாக இருக்க வேண்டியதன் அவசியத்தை நமக்கு நினைவூட்டுகிறது” என்று கூறினார்.

“துறைமுகத்தைத் திறந்து வைக்க இங்கு வந்துள்ள பிரதமர் நரேந்திர மோடியை கேரள அரசும், என் சார்பாகவும் அன்புடன் வரவேற்கிறேன். இது நம் அனைவருக்கும் பெருமையான தருணம். இந்தத் துறைமுகம் தொடங்கப்பட்டது ஒரு நவீன சகாப்தத்தின் விடியலைக் குறிக்கிறது. பிரதமரின் வருகை இந்த நிகழ்வை இன்னும் சிறப்பானதாக்குகிறது, மேலும் நம் அனைவருக்கும் மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது. இந்தத் துறைமுகத்தின் பிரகாசமான எதிர்காலம் குறித்து இது எங்களுக்கு நம்பிக்கையையும் தருகிறது என்றார்.