டெல்லி : மருத்துவர்கள் எந்தவொரு மருந்து நிறுவன பெயருடன் கூடிய மருந்துகளை (பிராண்டட்) பரிந்துரைக்ககூடாது என்றும், ஜெனரிக் மருந்து, மாத்திரைகளை மட்டுமே பரிந்துரைக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளது. இது மருத்துவர்களுக்கு பேரதிர்ச்சியை கொடுத்துள்ளது.
மருந்து நிறுவனங்களின் நெறிமுறையற்ற சந்தைப்படுத்தல் நடைமுறைகளுக்கு எதிராக கடுமையான நிலைப்பாட்டை எடுத்து, மருத்துவர்கள் பொதுவான மருந்து களை மட்டுமே பரிந்துரைக்க வேண்டும், குறிப்பிட்ட பிராண்டட் மருந்துகளை பரிந்துரைக்கக்கூடாது என்று இந்திய உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நாடு முழுவதும் அதிகரி வரும் நோய்களுக்கு ஏற்ப மருந்து மாத்திரைகளின் விலைகளும் பல மடங்கு உயர்ந்துள்ளது. இதனால் சாமானிய மக்கள் உயர்தர மருந்துகளை பெற முடியாத நிலை உள்ளது. இதை தடுக்கும் வகையில் மத்தியஅரசு ஜெனரிக் மருந்தகங்களை நாடு முழுவதும் திறந்து, பொதுமக்களுக்கு பயனளிக்கும் வகையில் குறைந்த விலையில் மருந்து மாத்திரைகளை விற்பனை செய்து வருகிறது. அதாவது வெளியில் ஒரு மாத்திரை விலை ரூ.100 என்றால், ஜெனரிக் மருந்தகங்களில் ரூ.20 முதல் 25 விலையில் கிடைக்கிறது. இதனால், மத்தியஅரசின் மக்கள் மருந்து கடை (ஜெனரிக் மருந்து கடை) களுக்கு மக்களிடையே நல்ல வரவேற்பு உள்ளது.
ஆனால், பல மருத்துவமனைகள், மருத்துவர்கள், தாங்கள் பரிந்துரைக்கும் சில குறிப்பிட்ட மருந்துகள், தாங்கள் நடத்தும் மருந்தகங்களில் மட்டுமே விற்பனை செய்து வருகின்றனர். இதுபோன்ற மருந்துகள் விலை கடுமையாக உள்ளது. இதனால், பொதுமக்கள் அல்லல் படுகின்றனர். மருத்துவர்கள் பரிந்துரைக்கும் பல மருந்துகள் ஜெனரிக் மருந்து கடைகளில் கிடைக்காத நிலையில், மருத்துவர்களும் வேறு மருந்துகளை உட்கொண்டால் உங்களுக்கு ஏற்படும் பாதிப்புகளுக்கு நாங்கள் பொறுப்பேற்க முடியாது என்று கூறி பயமுறுத்துகின்றனர்.
இந்த நிலையில், இதுதொடர்பாக உச்சநீதிமன்றத்தில், பொதுநல வழக்கு தொடரப்பட்டது. மனுவில், தாங்களாகவே மருந்துகளை விற்பனை செய்து வருகின்றனர். மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் தங்களது மருந்துகளை நியாயமற்ற முறையில் சந்தைப்படுத்துவதை ஒழுங்கப்படுத்த கோரிக்கை விடுக்கப்பட்டது. மேலும், மருந்து தயாரிப்பு நிறுவனங்கள், மருத்துவர்களுக்கு லஞ்சம் கொடுத்து, அதிகமான அல்லது பொருத்தமற்ற மருந்துகளை நோயாளிகளுக்கு பரிந்துரைப்பதாக தெரிவித்தார். அதிக விலை உள்ள முன்னணி நிறுவனங்களின் மருந்துகளையே வாங்குவதற்கு அழுத்தம் கொடுப்பதாகவும் இது சாதாரண மக்களுக்கு மருத்துவ செலவுகளை அதிகரிப்பததுடன், எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும் மருந்துகளை அதிகமாக பயன்படுத்த ஊக்குவிக்கப்படுவதால் அந்த மருந்தை சார்ந்தே இருக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படுவதாகவும் அவர் விரிவிக்கப்பட்டது.
இந்த மனுமீதான விசாரணை இன்று நடைபெற்றது. அப்போது, . இந்திய மருத்துவ விற்பனை பிரதிநிதிகள் கூட்டமைப்பு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், நேரடி வரிக்கான ஒன்றிய வாரிய அறிக்கையின்படி டோலோ 650 மாத்திரை உற்பத்தியாளர்கள், மருத்துவர்களுக்கு ரூ.1000 கோடி அளவுக்கு இலவசங்களை வழங்குவதாக சுட்டிக் காட்டினார்.
ஆனால், இதற்குஎதிர்ப்பு தெரிவித்த மனுதாரர் வழக்கறிஞர்கள், மருத்துவர்கள், ஜெனரிக் மருந்துகளை பரிந்துரைக்காமல், அதிக விலை உள்ள முன்னணி நிறுவனங்களின் மருந்துகளையே வாங்குவதற்கு அழுத்தம் கொடுக்கின்றனர் என கூறினர்.
அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், ராஜஸ்தானில் ஒவ்வொரு மருத்துவ நிபுணரும் ஜெனரிக் மருந்தை பரிந்துரைக்க வேண்டும் என்ற நிர்வாகம் உத்தரவு அமலில் உள்ளதாக தெரிவித்தனர்.
முன்னதாக, இந்த வழக்கை உச்சநீதிமன்ற நீதிபதிகள் விக்ரம் நாத், சஞ்சய் கரோல் மற்றும் சந்தீப் மேத்தா அமர்வு விசாரித்ததது. மருந்து நிறுவனங்கள் மருத்துவர்களுக்கு லஞ்சம் கொடுத்து அதிகப்படியான மற்றும்/அல்லது பகுத்தறிவற்ற மருந்துகளை பரிந்துரைப்பதாகவும், அதிக விலை மற்றும்/அல்லது அதிக விலை கொண்ட பிராண்டுகளை ஊக்குவிக்கின்றன என்றும், ருந்து சந்தைப்படுத்துதலின் சீரான குறியீடு ஒரு சட்டத்தின் நிறம் வழங்கப்படும் வரை, மருந்து நிறுவனங்களின் நெறிமுறையற்ற சந்தைப்படுத்தல் நடைமுறைகளைக் கட்டுப்படுத்தவும் ஒழுங்குபடுத்தவும் நீதிமன்றம் வழிகாட்டுதல்களை வகுக்க உத்தரவிட கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், இது அரசியலமைப்பின் பிரிவுகள் 32, 141, 142 மற்றும் 144 இன் கீழ் அனைத்து அதிகாரிகள்/நீதிமன்றங்களும் பின்பற்ற வேண்டும். இந்த விஷயத்தில் பதில் அளிக்க மத்தியஅரசுக்கு நோட்டீஸ் அனுப்பியது. இதைத்தொடர்ந்து வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, மருத்துவர்கள் ஜெனரிக் மருந்துகளை மட்டுமே பரிந்துரைக்க வேண்டும், குறிப்பிட்ட நிறுவனம் அல்லது பிராண்டின் மருந்துகளை பரிந்துரைக்கக்கூடாது என்று ஏதேனும் சட்டப்பூர்வ ஆணை உள்ளதா என்று நீதிபதி மேத்தா கேட்டார்.
அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ராஜஸ்தானில், ஒவ்வொரு மருத்துவ நிபுணரும் ஜெனரிக் மருந்தை பரிந்துரைக்க வேண்டும் என்ற நிர்வாக உத்தரவு இப்போதும் அமலில் உள்ளது என்று கூறினார்.
இதை எதிர்த்த மருந்துகள் நிறுவன வழக்கறிஞர், சட்டப்பூர்வ ஆணை எதுவும் இல்லை என்றும், மருத்துவர்கள் ஜெனரிக் மருந்துகளை பரிந்துரைக்க வேண்டும் என்ற “தன்னார்வ குறியீடு” மட்டுமே நடைமுறையில் உள்ளது என்றும் கூறினார்,.
மருத்துவர்கள் நோயாளிகளுக்கு குறிப்பிட்ட எந்த ஒரு நிறுவனத்தின் பெயரில் உள்ள மருந்தையும் மருத்துவர்கள் பரிந்துரைக்க முடியாது என்று சுட்டிக்காட்டியதுடன், ஜெனரிக் மருந்து, மாத்திரைகளை மட்டுமே மருத்துவர்கள் பரிந்துரைக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டதுடன், மருத்துவர்கள் எந்தவொரு தனியார் நிறுவன மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் மற்றும், எந்த ஒரு பிராண்ட்டுக்கு ஆதரவாகவும், அந்நிறுவன பெயரையும் பரிந்துரைக்க கூடாது என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.
மேலும், இந்த உத்தரவு முழுமையாக அமல்படுத்தப்பட்டால், நாடு முழுவதும் மிகப்பெரிய மாற்றத்தை இது கொண்டு வரும் என்றும் நீதிபதிகள் குறிப்பிட்டனர்.
இருப்பினும், நீதிமன்றம் இந்த வழக்கை ஜூலை 24 அன்று விசாரணைக்கு ஒத்திவைத்தது.