டெல்லி: நடப்பு கல்வியாண்டு முதல் சிபிஎஸ்இ பள்ளிகளில் 1 முதல் 8ம் வகுப்பு வரை ஆல் பாஸ் என்ற விதிமுறை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி புதிய விதிமுறைகள் இந்த ஆண்டு முதல் அமலுக்கு வந்துள்ளது.

சிபிஎஸ்இ பள்ளிகளில் 8ம் வகுப்பு வரை ஆல் பாஸ் இல்லை என்றும், நடப்பு கல்வி ஆண்டு முதல், சிபிஎஸ்இ பள்ளிகளில் 3, 5, 8ம் வகுப்புகளிலும் கண்டிப்பாக தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்றும், குறைந்த மதிப்பெண்கள் எடுத்தால் ‘ஃபெயில்’ என்ற நடைமுறை அமலுக்கு வந்தது.
இந்த புதிய நடைமுறை, இந்த ஆண்டுக்கான தேர்வு முடிவுகள் வெளியாகிவிட்டதால் வரும் ஆண்டு முதல் அமலுக்கு வருவதாகவும், புதிய தேசிய கல்விக் கொள்கை 2020-இன் படி இந்த நடைமுறை அமலுக்கு வருவதாக தெரிவிக்கப்பட்டு உள்ளதுடன், இதுதொடர்பாக மாணவர்களின் பெற்றோரிடமும் ஒப்புதல் கடிதத்தை பெற அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதன்படி, சிபிஎஸ்இ பள்ளி நிர்வாகங்கள், பெற்றோர்களுக்கு இதுதொடர்பான அறிவிப்பை அனுப்பி ஒப்புதல் கடிதங்களை பெற்று வருகின்றன.
ஆனால், தமிழ்நாட்டில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளகிளில் தொடக்கக் கல்வியை முடிக்கும் வரை எந்தக் குழந்தையும் பள்ளியிலிருந்து தடுத்து வைக்கப்படவோ அல்லது வெளியேற்றப்படவோ மாட்டாது. மாநில விதிகளின்படி, பள்ளிகளில் படிக்கும் அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட வேண்டும் என உத்தர விடப்பட்டுள்ளது.