சென்னை: சென்னை மாநகருக்குள் கட்டுமானப் பணிகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டு உள்ளது. அதன்படி, வழிகாட்டுதல்களை மீறுபவர்களுக்கு ரூ.1,000 முதல் ரூ.5 லட்சம் வரை அபராதம் வசூலிக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சென்னை மாநகருக்குள் மேற்கொள்ளப்பட்டு வரும் கட்டுமான பணிகளுக்கு வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது. வழிகாட்டுதல்களை பின்பற்றாத கட்டடங்களுக்கு ரூ.30,000 முதல் ரூ.5 லட்சம் வரை அபராதம் விதிக்க மாநகராட்சி முடிவு செய்துள்ளது/
20 ஆயிரம் சதுர மீட்டர் வரையான தளங்களில் விதிமீறலுக்கு ரூ.25,000 வரை அபராதம்.
500 சதுர மீட்டர் பரப்பளவு வரையான கட்டிடங்களுக்கு ரூ.10,000 வரை அபராதம்.
நடுத்தர, குறைந்த மதிப்பு கொண்ட கட்டிடங்களை விதிமீறல்களை சரிசெய்ய 10 நாட்கள் அவகாசம் வழங்கப்படுவதாகவும் சென்னை மாநகராட்சி கூறியுள்ளது.