சென்னை: ஜம்முகாஷ்மீர் பஹல்காம் தாக்குதல் எதிரொலியாக இந்தியாவில் உள்ள பாகிஸ்தானியர்களை 24 மணி நேரத்திற்குள் திருப்பி அனுப்ப மத்திய அரசு உத்தர விட்டுள்ளது. இந்த நிலையில் தமிழ்நாட்டில் உள்ள பாகிஸ்தானியர்கள் வரும் 29ந்தேதிக்குள் வெளியேற வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

காஷ்மீர் மாநிலத்தின் சுற்றுலாத்தலமான மினி சுவிட்சர்லாந்து என அழைக்கப்படும், பஹல்காமில் ஏப்ரல் 22 ஆம் தேதி சுற்றுலாப் பயணிகள் மீது பயங்கரவாதிக துப்பாக்கி மூலம் சுட்டு தாக்குதல் நடத்தினர். இந்த துப்பாக்கி சூட்டின்போது, இந்துக்கள் யார் என கேட்டும், அறிந்தும், அவர்களை மனிதாபிமானமற்ற முறையில் சுட்டுக்கொண்டனர். இந்த துப்பாக்கி சூட்டில் 29 பேர் சம்பவ இடத்திலேயெ பலியாகினர். இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானை சேர்ந்த அமைப்பு ரெசிஸ்டன்ஸ் பிரண்ட் (TRF) பொறுபேற்றுள்ளது. மேலும் இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானுக்கு சம்மந்தம் இருப்பதாக கூறப்படுகிறது. இதற்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்து பதிலடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அனைத்து விசாக்களையும் ரத்து செய்து உத்தரவிட்டு உள்ளது.
அதன் தொடர்ச்சியாக நாடு முழுவதும் உள்ள அனைத்து பாகிஸ்தானியர்கள் 24 மணி நேரத்திற்கும் இந்தியாவை விட்டு வெளியேற அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய அரசு நோட்டீஸ் அனுப்பி உள்ளது.அதன் ஒரு பகுதியாக,தமிழ்நாட்டில் வசிக்கும் பாகிஸ்தானியர்களை அடையாளம் கண்டு இன்று ஏப்ரல் 25க்குள் பாகிஸ்தானுக்கு திருப்பி அனுப்பும் முயற்சிகளை தமிழ்நாடு அரசு மேற்கொண்டு வருகிறது.
இதுகுறித்து அதிகாரிகள் நடத்திய ஆய்வில் சுமார் 180 முதல் 200 பாகிஸ்தானியர்கள் தமிழ்நாட்டில் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் அவர்கள் அனைவரையும் வரும் 27ஆம் தேதிக்குள் மிழ்நாட்டில் இருந்து வெளியேற்றும் நடவடிக்கைகளை அதிகாரிகள் துரிதப்படுத்தியுள்ளனர்.
பாகிஸ்தான் நாட்டில் இருந்து மருத்துவ விசா மூலம் சென்னைக்கு வந்து இங்குள்ள பெரிய மருத்துவமனையில் பாகிஸ்தானை சேர்ந்த சிலர் சிகிச்சை பெற்று வருவதும், வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் சிலர் சிகிச்சை பெற்று வருவதும் அதிகாரிகள் நடத்திய ஆய்வில் தெரிவந்தது. இதுபோன்று சிகிச்சையில் இருப்பவர்களுக்கு மட்டும் 29 வரை இருக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதன்பிறகு அவர்கள் தமிழ்நாட்டை விட்டு வெளியேற காவல்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர். 29ஆம் தேதிக்கு பிறகும் தமிழ்நாட்டில் பாகிஸ்தானியர்கள் தங்கி இருந்தால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
மேலும் தமிழ்நாட்டில் உள்ள பாகிஸ்தானியர் உடனடியாக காவல் நிலையங்களில் தங்களை பற்றி தெரிவிக்க உத்தரவிடப்பட்டுள்ளது