சென்னை: இஸ்ரோ முன்னாள் தலைவர் கஸ்தூரி ரங்கன் காலமானர். அவருக்கு வயது 84. வயது மூப்பு காரணமாக அவர் காலமானதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய விண்வெளி ஆய்வு மையத்தில் 1994 முதல் 2003 ஆம் ஆண்டு வரை தலைவராக இருந்தவர் கஸ்தூரி ரங்கன். ஜிஎஸ்எல்வி ராக்கெட் வடிவமைப்பில் முக்கிய பங்காற்றியுள்ளார். இந்நிலையில் 84 வயதான கஸ்தூரி ரங்கன் வயது மூப்பு காரணமாக காலமாகியுள்ளார். பெங்களூருவில் வசித்து வந்த கஸ்தூரி ரங்கன் காலமானதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் மாநிலங்களவை உறுப்பினராகவும் இருந்துள்ள கஸ்தூரி ரங்கன் பத்ம விபூஷன் விருதும் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பின் (ISRO) முன்னாள் தலைவர் கே. கஸ்தூரிரங்கன்,  கடந்த 2024ம் ஆண்டு ஜுலை மாதத்தில்  இலங்கையில் பயணம் செய்தபோது  திடீரென மாரடைப்பால் பாதிக்கப்பட்டார். இதையடுத்து அவர்  கொழும்பிலிருந்து  பெங்களூரு அழைத்து வரப்பட்டு அங்குள்ள நாராயண ஹ்ருதயாலயத்திற்கு சிகிச்சைக்காக விமானம் மூலம் கொண்டு செல்லப்பட்டார்.   அங்கு அவருக்கு  புகழ்பெற்ற இருதயநோய் நிபுணர் டாக்டர் தேவி ஷெட்டி, பலதரப்பட்ட மருத்துவர்கள் குழுவுடன் அவரது உடல்நிலையை கண்காணித்து சிகிச்சை வழங்கினார். இதையடுத்து அவர் உடல்நலம் தேறி வீட்டில் இருந்து மருத்துவ உதவி பெற்று வந்தார்.

இந்த நிலையில், இன்று அவர் காலமானதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.