டெல்லி: பெண் பத்திரிக்கையாளர்கள் குறித்து அவதூறு கருத்து தொடர்பான வழக்கில், தண்டனை பெற்றுள்ள காமெடி நடிகர் எஸ்.வி.சேகர் சரணடைய மேலும் அவகாசம் வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. இது சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
சமீபகாலமாக உச்சநீதிமன்றத்தின் பல்வேறு தீர்ப்புகள் விமர்சனங்களுக்கு உள்ளாகி வரும் நிலையில், எஸ்விசேகர் விஷயத்திலும், அவருக்கு மேலும் அவகாசம் வழங்கப்பட்டு, இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பெண் பத்திரிக்கையாளர்கள் குறித்து அவதூறு கருத்து தெரிவித்த வழக்கில் எஸ்.வி.சேகர் சரணடைய ஜூலை மாதம் வரை அவகாசம் நீட்டித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

பெண் பத்திரிகையாளர்கள் குறித்த அவதூறு கருத்து வெளியிட்ட விவகாரத்தில் தனக்கு வழங்கப்பட்ட சிறை தண்டனையை எதிர்த்து எஸ்.வி.சேகர் தொடர்ந்த மேல்முறையீட்டு மனு உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் சூர்யகாந்த் தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது.
இன்றைய விசாரணையின்போது எஸ்.வி.சேகர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், இந்த விவகாரத்தில் ஒருமுறை செய்த தவறுக்காக தனக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் இந்த விவகாரத்தில் தான் மன்னிப்பு கோரிய பின்பும் அதனை ஏற்க உயர் நீதிமன்றம் மறுத்துள்ளது என கூறினார்.
ஆனால், இதை ஏற்க மறுத்த உச்சநீதிமன்ற நீதிபதிகள், இந்த விவகாரத்தில், நீங்கள் மன்னிப்பு கேட்கவில்லை என்பதை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளதே? . நீங்கள் பல பெண் பத்திரிகையாளர்களை இவ்வாறு தரை குறைவாக பேசியிருப்பதாக தானே இந்த வழக்கில் புகார்தார்கள் குற்றம் சாட்டி இருக்கிறார்கள் என்றனர்.
இதைத்தொடர்ந்து வாதாடிய எஸ்வி சேகர் வழக்கறிஞர், அவர் ஒரு மெசேஜை பார்வேர்ட் மட்டும் தான் செய்தார். பின்னர் அதை உடனடியாக நீக்கவும் செய்து விட்டேன். புகார் அளித்த பெண் பத்திரிகையாளரும் அந்த புகாரை திரும்ப பெற்றுவிட்டார். ஆனால் ஒரு பத்திரிகையாளர் அமைப்பு தொடர்ந்த வழக்கில் தான் தற்போது இந்த தண்டனை என்பது விதிக்கப்பட்டிருக்கிறது என்றார்.
மேலும், எஸ்விசேகர் தன்னுடைய வாழ்நாளில் பொய் கூறியது இல்லை, எனவே இந்த விவகாரத்தை பொருத்தவரை அவர் ஏற்கனவே மன்னிப்பு கோரியுள்ளார். அதனால், அவர்மீதான 30நாட்கள் சிறை தண்டனை என்பதை ரத்து செய்ய வேண்டும். அதேபோல் 15,000 ரூபாய் அபராதத்தையும் ரத்து செய்ய வேண்டும். இந்த விவகாரத்தை பொருத்தவரைக்கும் தான் சம்பந்தப்பட்ட பெண் பத்திரிகையாளிடம் நேரடியாக மன்னிப்பு கேட்கிறேன்… மீண்டும் மன்னிப்பு கேட்கிறேன், எனவே தனது தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என வாதிட்டார்.
இதையடுத்து கருத்து தெரிவித்த நீதிபதிகள், பெண் பத்திரிகையாளர்களை அவதூறாக பேசிய விவகாரத்தில் எஸ்.வி சேகர் நேரடியாக சம்பந்தப்பட்ட பின் பத்திரிகையாளரை அணுகி அவரிடம் மன்னிப்பு கூறுவதற்கும், தனது தரப்பு விஷயத்தை விளக்குவதற்கும் தயாராக இருப்பதாக அவர் தெரிவித்தார் எனவே அதனை ஏற்கிறோம். அதன் அடிப்படையில் இந்த விவகாரத்தில் சரணடையவதற்கான காலத்தை ஜூலை மாதம் வரை நீட்டிக்கிறோம் என்று தெரிவித்துள்ளார்.
உச்சநீதிமன்றத்தின் இதுபோன்ற அறிவிப்புகள் அனைத்து வழக்குகளுக்கும் பொருந்துமா அல்லது நாட்டின் பிரபலமானவர்களுக்கு மட்டும்தான் பொருந்துமா என்பது தெளிவுபடுத்தப்பட வேண்டும் என சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.
ஒரு தவறை செய்துவிட்டு, அதற்கு மன்னிப்பு கோரினால், அவர் அந்த தவறுக்கான தண்டனையில் இருந்து விடுதலை செய்யப்பட்டால், நாளை இந்த தீர்ப்பையே சுட்டிக்காட்டி மேலும் பலர், எதிராளியை மிரட்டி, புகாரை வாபஸ்பெற வைத்து, இரு தரப்பும் சமாதானம் செய்துகொள்வதாக கூறினால், அவர்களுக்கு தண்டனை கிடையாதா? இதைத்தான் சட்டம் சொல்கிறதா?
[youtube-feed feed=1]