சென்னை; சொத்து குவிப்பு வழக்கில் இருந்து அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் விடுவிக்கப்பட்ட உத்தரவு ரத்து செய்து சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவிட்டு உள்ளது. இது திமுக அரசுக்கு மேலும் ஒரு இடியாக அமைந்துள்ளது.

ஏற்கனவே திமுக அமைச்சர்கள் செந்தில் பாலாஜி மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது. வழக்கு தொடர்பாக சுமார் ஓராண்டு காலம் சிறை தண்டனை பெற்ற நிலையில், உச்சநீதிமன்றம் ஜாமின் வழங்கியதால், மீண்டும் அமைச்சராக உள்ளார். தற்போது அவரது அமைச்சர் பதவிக்கும் உச்சநீதி மன்றம் கெடு விதித்துள்ளது. அதுபோல திமுக அமைச்சர்கள் பெரும்பாலானவர்கள் மீது சொத்துக்குவிப்பு வழக்குகள் நிலுவையில் உள்ளன.
ஏற்கனவே வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் அமைச்சர்கள் பொன்முடி, துரைமுருகன் விடுவிக்கப்பட்ட உத்தரவை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்து மறு விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.
இந்த நிலையில், தற்போது, விவசாய துறை அமைச்சர் MRK பன்னீர்செல்வத்தை விடுவித்த கீழமை நீதிமன்றத்தின் உத்தரவையும் உயர்நீதி மன்றம் அதிரடியாக ரத்து செய்து உத்தரவிட்டு உள்ளது.
அமைச்சர் MRK பன்னீர்செல்வம் மீதான குற்றச்சாட்டு பதிவு செய்து விசாரணையை 6மாதத்தில் முடிக்க கடலூர் சிறப்பு நீதிமன்றத்துக்கு ஐகோர்ட் ஆணையிட்டுள்ளது. லஞ்சஒழிப்புத் துறையின் மறு ஆய்வு மனுவை ஏற்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.