ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலில் காயமடைந்த தமிழர்களின் நிலை மற்றும் அவர்களின் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

‘மினி சுவிட்சர்லாந்து’ என்று அழைக்கப்படும் பைசரனில் பயங்கரவாதத் தாக்குதல் நடந்தது, அதன் புல்வெளிக்காகவும், கால்நடையாகவும் அல்லது குதிரைவாலி வழியாகவும் மட்டுமே செல்ல முடியும், அங்கு செவ்வாய்க்கிழமை (22-4-25) காலை சுற்றுலாப் பயணிகள் குழு சென்றிருந்தது. தடைசெய்யப்பட்ட பாகிஸ்தானை தளமாகக் கொண்ட லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதக் குழுவின் நிழல் குழுவான ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்ட், இந்தத் தாக்குதலை நடத்தி ஏராளமானோரை கொன்று குவித்ததுடன், இதற்கு பொறுப்பேற்றுள்ளது.

பஹல்காம் பகுதியில் நடத்தப்பட்ட பயங்கராவாத தாக்குதலில் 26 சுற்றுலாப் பயணிகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், 2 தமிழர்கள் உட்பட ஏராளமானோர் காயமடைந்தனர். இதில் 17 சுற்றுலா பயணிகள் காயங்களோடு பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், 2 தமிழர் களுடைய மருத்துவ நிலை குறித்தான தகவல் வெளியாகியுள்ளது.

அதில் தமிழகத்தை சேர்ந்த 31 வயதான பரமேஸ்வர் என்பவர் வயிற்றுப் பகுதியில் காயம் ஏற்பட்டு பஹல்காம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும்,   மற்றொரு தமிழரான சாண்டானோ என்பவர் தாக்குதல் சம்பவத்தால் மன அழுத்தம் ஏற்பட்டு சுயநினைவை இழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 83 இவர், ஜம்மு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

இவர்கள் 2 பேர்  உள்பட  6 பேர் தொடர்ந்து மருத்துவர்களின் கண்கணிப்பில் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், மதுரையை சேர்ந்த 30 பேர் உள்ளிட்ட 68 பேர் காஷ்மீர் மாநிலத்துக்கு சுற்றுலா சென்றுள்ள அவர்கள்  தற்போது பாதுகாப்பாக இருக்கிறார்கள். அவர்களில் பெரும்பாலானவர்கள் வீடியோ கால் மூலம் தங்களது உறவினர்களுடன் பேசி இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் அன்று இரவே  ஸ்ரீநகரை அடைந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, கொல்லப்பட்டவர்களின் குடும்பத்தினருடனும், தாக்குதலில் உயிர் பிழைத்த மற்றவர்களுடனும் புதன்கிழமை கலந்துரையாடினார். விசாரணையில் உள்ளூர் போலீசாருக்கு உதவ தேசிய புலனாய்வு அமைப்பின் குழுவும் பஹல்காமை அடைந்தது. தாக்குதலில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் மூன்று பேரின் ஓவியங்களை பாதுகாப்பு நிறுவனங்கள் வெளியிட்டுள்ளன.

இந்த கொடூர தாக்குதலில் உயிரிழந்த 26 பேரின்  தகவல்களை வெளியிட்டுள்ள மத்தியஅரசு, காயமடைந்தவர்களின் விவரங்களை இதுவரை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த தாக்குதலில் சிக்கியவர்கள் மற்றும் பலியானோர், காயமடைந்தவர்கள் அறிந்துகொள்ள பல்வேறு உதவி எண்கள் அறிவிக்கப்பட்டு உள்ளது.

அவசர கட்டுப்பாட்டு அறை – ஸ்ரீநகர்: 0194-2457543, 0194-2483651; 7006058623; 24/7

சுற்றுலா உதவி மையம் – காவல் கட்டுப்பாட்டு அறை, அனந்த்நாக் 9596777669, 01932-225870,  வாட்ஸ்அப்: 9419051940;

ஜம்மு மற்றும் காஷ்மீர் சுற்றுலாத் துறை – 8899931010, 8899941010, 9906663868, 9906906115.