ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் நடைபெற்ற கொடூர தாக்குதலில் அம்மாநிலத்திற்கு சுற்றுலா சென்ற அப்பாவி சுற்றுலா பயணிகள் பலியாகி உள்ளனர்.
அமர்நாத் யாத்திரை அடுத்த சில வாரங்களில் துவங்க உள்ள நிலையில் இந்த சம்பவம் பக்தர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்க துணை அதிபர் இந்தியா வந்துள்ள அதேவேளையில் நடைபெற்றுள்ள இந்த தீவிரவாத தாக்குதல் உளவுத் துறையின் தோல்வியை காட்டுவதாக பல்வேறு தரப்பினர் குற்றம்சாட்டியுள்ளனர்.

அதேவேளையில், பிரதமர் மோடி இம்மாதம் 19ம் தேதி ஜம்மு காஷ்மீர் செல்ல இருந்த நிலையில் அந்தப் பயணம் கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்டது.
இந்த நிலையில், தீவிரவாதிகள் பிரதமரை குறிவைத்ததாகத் தகவல் வெளியாகி உள்ளது.
இந்த நிலையில் நாட்டின் 15க்கும் மேற்பட்ட மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் கொல்லப்பட்டுள்ளதை அடுத்து இதற்கு உள்துறை அமைச்சர் அமித் ஷா பொறுப்பேற்று ராஜினாமா செய்யவேண்டும் என்று பல்வேறு அரசியல் கட்சியினர் வலியுறுத்தியுள்ளனர்.