ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் நேற்று நடைபெற்ற பயங்கவாத தாக்குதலில் அப்பாவி சுற்றுலா பயணிகள் 26 பேர் உயிரிழந்தனர்.
தீவிரவாதிகளின் இந்த கோழைத்தனமான தாக்குதலுக்கு ஐ.நா. தலைவர் உள்ளிட்ட பல்வேறு உலக நாடுகளின் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இரண்டு நாள் பயணமாக சவூதி அரேபியா சென்றிருந்த பிரதமர் மோடி இந்த தாக்குதலை அடுத்து தனது பயணத்தை பாதியிலேயே ரத்து செய்துவிட்டு நாடு திரும்பினார்.
இந்த நிலையில் உயிரிழந்த 26 பேரின் விவரங்கள் தற்போது வெளியாகி உள்ளது.

இதில் மகாராஷ்டிராவைச் சேர்ந்த 5 பேர், கர்நாடகாவைச் சேர்ந்த 3 பேர், குஜராத் 3, மேற்கு வங்கம் 2, மற்றும் ஆந்திரா, உத்தர பிரதேசம், அருணாச்சல பிரதேசம், மத்திய பிரதேசம், ஹரியானா, சண்டிகர், கேரளா, ஒடிஷா, பீகார், உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த தலா ஒருவர் கொல்லப்பட்டுள்ளனர்.
காஷ்மீர் மாநிலத்தைச் சேர்ந்த 2 பேர் மற்றும் நேபாள நாட்டைச் சேர்ந்த ஒருவரும் இந்த கொடூர தாக்குதலில் உயிரிழந்துள்ளார்.

தாக்குதலில் 17 பேர் காயமடைந்துள்ள நிலையில் அவர்களில் 6 பேர் கவலைக்கிடமாக உள்ளனர் இதில் 2 பேர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள்.
குண்டடிபட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் இந்த 17 பேரில் 11 பேரின் உடல்நிலை சீராக உள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.