ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் அனந்த்நாக் மாவட்டத்தில் இன்று நடைபெற்ற தீவிரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது.

சுற்றுலா பயணிகளை குறிவைத்து நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் ஏராளமான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் காயமடைந்தனர்.

இதில் தமிழ்நாடு, கர்நாடகா, குஜராத், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த சுற்றுலா பயணிகளும் அடங்குவர்.

தெற்கு காஷ்மீரில் உள்ள பஹல்காமில் உள்ள ஒரு முக்கிய சுற்றுலாத் தலத்தில் நடத்தப்பட்ட இந்த பயங்கரவாத தாக்குதலில் கடந்த சில ஆண்டுகளில் நடைபெற்ற மிகப்பெரிய தீவிரவாத தாக்குதல் என்று கூறப்படுகிறது.

இந்த தாக்குதலை அடுத்து காஷ்மீர் விரைந்துள்ள உள்துறை அமைச்சர் அமித் ஷா மாநில முதல்வர் உமர் அப்துல்லா உள்ளிட்ட உயர் அதிகாரிகளுடன் பாதுகாப்பு குறித்த ஆலோசனை நடத்தினார்.

இந்தக் கொடூரமான செயலுக்குப் பின்னால் இருப்பவர்கள் நீதியின் முன் நிறுத்தப்படுவார்கள் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.

சவுதி அரேபியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மோடி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு, சம்பவத்திற்கு பதிலளிக்கும் வகையில் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்குமாறு உத்தரவிட்டார்.