சென்னை: டாஸ்மாக் வழக்கில் வாதங்கள் முடிவடைந்த நிலையில், தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டு உள்ளது. வரும் 23ந்தேதி தீர்ப்பு வழங்கப்படும் என அறிவிக்கப் பட்டுள்ளது.

டாஸ்மாக் அலுவலகத்தில் நடைபெற்ற சோதனை தொடர்பாக அமலாக்கத்துறை மேல் நடவடிக்கை எடுக்க தடை இல்லை என சென்னை உயர்நீதிமன்றம் எற்கனவே கூறிய நிலையில், வழக்கின் தீர்ப்பை 23ஆம் தேதிக்கு தள்ளி வைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

டாஸ்மாக் தலைமை அலுவலகம் உள்பட துறை சார்ந்தவர்கள், டாஸ்மாக் மது சப்ளையர்கள் உள்பட பல இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள், மார்ச் 6 முதல் 8ஆம் தேதி வரை  திடீர் சோதனை நடத்தியது. இந்த  சோதனையை சட்ட விரோதமானது என அறிவிக்க கோரி தமிழக அரசு, டாஸ்மாக் வழக்கு தொடர்ந்தது. அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்ததை அடுத்து தீர்ப்பை நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், கே.ராஜசேகர் அமர்வு தள்ளி வைத்தது.

டாஸ்மாக் நிறுவனம் மற்றும் மது சப்ளை செய்யும் நிறுவனங்களில் அமலாக்கத்துறை நடத்திய சோதனையில் ரூ.1000 கோடிக்கு மேல் முறைகேடு நடைபெற்றுள்ளதாக அமலாக்கத்துறை தெரிவித்திருந்த நிலையில், அமலாக்கத்துறையின் நடவடிக்கை எதிர்த்து தமிழ்நாடு அரசு தாக்கல் செய்த மனுவை விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுத்து விட்டது. இந்த நிலையில்,  வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம்,  டாஸ்மாக் சோதனை தொடர்பாக அமலாக்கத்துறை மேல் நடவடிக்கை எடுக்க தடை இல்லை சென்னை உயர் நீதிமன்றம் அதிரயாக அனுமதி வழங்கியமு-

இதையடுத்து, அரசு அனுமதியின்றி டாஸ்மாக் அலுவலகங்களில் நடைபெற்ற சோதனை சட்டவிரோதமானது என அறிவிக்கக்கூறி தமிழக உள்துறை செயலாளரும், டாஸ்மாக் நிர்வாக இயக்குனரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கின் விசாரணை நடத்திய நீதிபதிகள் செந்தில்குமார் அமர்வு, அமலாக்கத்துறையின் நடவடிக்கையை கடுமையாக விமர்சித்ததுடன், அமலாக்கத்துறை நடவடிக்கையை நிறுத்தி வைக்க உத்தரவிட்டனர். நீதிபதியின் இந்த நடவடிககை கடும் விமர்சனங்களை ஏற்படுத்தியது. இதையடுத்து, அவர்கள் இந்த வழக்கில் இருந்து விலகிய நிலையில்,  நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், கே.ராஜசேகர் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அவர்கள் வழக்கை விசாரித்ததுடன், தமிழ்நாடு அரசின் நடவடிக்கை மீது அதிருப்தி தெரிவித்தனர். விசாரணையின்போது,  அமலாக்கத்துறை சோதனையில் அரசு அதிகாரிகள் துன்புறுத்தப்பட்டதாக மூத்த வழக்கறிஞர் விக்ரம் சவுத்ரி வாதிட்டார். ஆனால், அதை ஏற்க நீதிபதிகள் மறுத்துவிட்டதுடன், வழக்கு விசாரணை ஏப்ரல் 9ந்தேதிக்கு ஒத்தி வைத்தனர். அதைத்தொடர்ந்து கடந்த சில நாட்கள் வாதங்கள் நடைபெற்று வந்தன.

இந்த வழக்கின் இரு தரப்பு வாதங்கள் முடிவடைந்த நிலையில், வழக்கின் தீர்ப்பு 23ந்தேதி வழங்கப்படும் என கூறி நீதிபதிகள் தீர்ப்பை ஒத்தி வைத்தனர்.

தமிழ்நாடு அரசு உயர் நீதிமன்றத்தை அவமானப்படுத்துகிறது – சட்ட நடைமுறையை தவறாக பயன்படுத்துகிறது! டாஸ்மாக் வழக்கில் நீதிபதிகள் அதிருப்தி…

டாஸ்மாக்கில் ரூ.1000 கோடி ஊழல்! மீண்டும் கைது செய்யப்படுகிறாரா செந்தில் பாலாஜி…? அமலாக்கத்துறை வெளியிட்ட அறிக்கை