ராமேஸ்வரம்: அந்நிய செலாவணி முறைகேடு தொடர்பாக ராமேசுவரம் பகுதியில் செயல்பட்டு வரும் 60அறைகளை கொண்ட பிரபல நட்சத்திர விடுதியுடன் கூடிய ரிசார்ட்டை (Seven Hills Pamban Island Resort) அமலாக்கத்துறை கையகப்படுத்தி நடவடிக்கை எடுத்துள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ராமேசுவரம் அக்னி தீர்த்தம் கடற்கரை அருகே செயல்பட்டு வருகிறது Seven Hills Pamban Island Resort என்ற பெயரிலான பிரபல நட்சத்திர விடுதி. இதுந்து மேற்குவங்க மாநிலத்தை சேர்ந்த டிபி குளோபல் பிக்ஸ் நிறுவனத்தை சேர்ந்ததாக கூறப்படுகிறது. இந்த நட்சத்திர விடுதியானது, டி எம் டிரேடர்ஸ் மற்றும் கே கே டிரேடர்ஸ்க்கும் உரிமையானது என கூறப்படுகிறது.

இந்த நிறுவனம் மீதான அந்நிய செலாவணி மோசடி தொடர்பான வழக்கில், ராமேசுவரம அக்னி தீர்த்தம் கடற்கரை அருகே 60 அறைகளுடன் செயல்பட்டு வந்த நட்சத்திர விடுதியுடன் கூடிய ரிசாட்டை கையகப்படுத்தி அமலாக்கத் துறை நடவடிக்கை எடுத்துள்ளது. அதாவது, ராமேஸ்வரம் ரிசார்ட்டின் ₹30 கோடி மதிப்புள்ள 60 அறைகள் மற்றும் ஒரு ரிசார்ட்டின் காலியாக உள்ள நிலத்தை அமலாக்க இயக்குநரகம் கையகப்படுத்தியதாகக் கூறி உள்ளது.
இதுதொடர்பான வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், மேற்கு வங்கத்தில் டிபி குளோபல் பிக்ஸ் என்ற பெயரில் அந்நிய செலாவணி வர்த்தக நிறுவனம் துவங்கி, வர்த்தக முதலீடுகளில் அதிக வருமானம் தருவதாக பொது மக்களிடம் முதலீடுகளை பெற்று மோசடியில் ஈடுபட்டதாக கொல்கத்தா போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில், இந்திய ரிசர்வ் வங்கியிடம் டிபி குளோபல் பிக்ஸ் நிறுவனம் அந்நிய செலாவணி வர்த்தகத்துக்கு எந்த அங்கீகாரமும் பெறவில்லை என்று குறிப்பிட்டுள்ளது.

பிரசென்ஜித் தாஸ், துஷார் படேல் மற்றும் ஷைலேஷ் குமார் பாண்டே ஆகிய நிறுவனங்களுடன் தொடர்புடைய நபர்களால், TP குளோபல் FX மூலம் அந்நிய செலாவணி வர்த்தக முதலீடுகளில் அதிக வருமானம் தருவதாக உறுதியளித்து, முதலீட்டாளர்களை “மோசடி” திட்டங்களில் கவர்ந்திழுக்க ஏராளமான “போலி” நிறுவனங்களைப் பயன்படுத்தி ஒரு “நவீன மோசடி” திட்டமிடப்பட்டதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.
IX குளோபல் விராஜ் சுஹாஸ் பாட்டீல் மற்றும் ஜோசப் மார்டினெஸ் என்ற மற்றொரு நிறுவனத்தின் இயக்குநர்கள் மற்றும் விளம்பரதாரர்கள் TP குளோபல் FX ஐ தங்கள் விருப்பமான தரகர்களாக “தீவிரமாக விளம்பரப்படுத்தினர்” என்றும், IX குளோபலின் உறுப்பினர்களும் பயனர்களும் தங்கள் அந்நிய செலாவணி வர்த்தக நடவடிக்கைகளுக்கு TP குளோபல் FX இன் தரகு சேவைகளைப் பயன்படுத்தினர் என்றும் அமலாக்கத்துறை கூறியுள்ளது.
முதலீட்டாளர்களிடமிருந்து சேகரிக்கப்பட்ட நிதி படேல் மற்றும் அவரது கூட்டாளிகளின் பெயரில் தனிப்பட்ட சொத்துக்களை வாங்க “திசைதிருப்பப்பட்டது”. இது “போலி” கணக்குகள் மூலம் பணத்தை செலுத்துதல் மற்றும் முழு அளவிலான பணமாற்றியாளர்களின் சேவைகளை ஈடுபடுத்துதல் உள்ளிட்ட சிக்கலான முறைகள் மூலம் நிறைவேற்றப்பட்டது என்று அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.

இந்த முறைகேடு காரணமாக பிரசென்ஜித் தாஸ், சைலேஷ்குமார் பாண்டே மற்றும் துஷார் பாட்டீல் ஆகியோர் (Prasenjit Das, Tushar Patel and Shailesh Kumar Pandey ) ED-யால் கைது செய்யப்பட்டுள்ளனர், அவர்கள் மீது இந்த வழக்கில் இரண்டு குற்றப்பத்திரிகைகளை தாக்கல் செய்துள்ளனர்.
இந்த வழக்கின் அடிப்படையில் அமலாக்கத் துறை அதிகாரிகள் நாடு முழுவதும் உள்ள டிபி குளோபல் பிக்ஸ் நிறுவனங்களில் விசாரணை மற்றும் அதிரடி சோதனை நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நடவடிக்கையின் ஒரு பகுதியாக பகுதியாக ராமேசுவரம் அக்னி தீர்த்தம் கடற்கரை அருகே டிபி குளோபல் பிக்ஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான 60 அறைகள் கொண்ட நட்சத்திர விடுதி மற்றும் அதன் நிலத்தையும் அமலாக்கத் துறை கையகப்படுத்தி உள்ளது.