சூரிய மண்டலத்திற்கு 124 ஒளி ஆண்டுகள் தொலைவில் உயிரினங்கள் இருப்பதற்கான ஆதாரங்கள் இருப்பதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
பூமியை விட 8.6 மடங்கு பெரியதும் 2.6 மடங்கு பெரிய விட்டமும் கொண்ட K2-18 b என்று பெயரிடப்பட்ட ஒரு கிரகத்தில் உயிரினங்கள் இருப்பதை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
ஜேம்ஸ் வெப் (James Webb) விண்வெளி தொலைநோக்கியைப் பயன்படுத்தி விஞ்ஞானிகள் அந்த முடிவுக்கு வந்துள்ளனர்.

பூமியில் உயிரியல் செயல்முறைகளால் மட்டுமே உற்பத்தி செய்யப்படும் வாயுக்களின் வேதியல் தடயங்கள் அந்த கிரகத்தில் இருப்பது அவர்கள் உறுதிசெய்துள்ளனர்.
DiMethyl Sulphide (DMS) மற்றும் DiMethyl DiSulphide (DMDS) ஆகிய இரண்டு வாயுக்களும் பூமியில் வாழும் உயிரினங்கள் குறிப்பாக கடல் வாழ் ஆல்கெ (algae) போன்ற நுண்ணுயிரிகளால் உருவாக்கப்படுவதாகும்.
இந்த வாயுக்களின் தடயங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதை அடுத்து K2-18 b கிரகத்தில் நுண்ணுயிரிகள் இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாக விஞ்ஞானிகள் முடிவுக்கு வந்துள்ளனர்.
இதுகுறித்து தொடர் ஆராய்ச்சி மற்றும் கண்காணிப்புகள் தேவைப்படுவதாகக் கூறிய விஞ்ஞானிகள், வேற்று கிரகவாசிகள், உயிரினங்கள், போன்ற ஆராய்ச்சியில் இந்த கண்டுபிடிப்பு ஒரு முக்கிய மைல் கல்லாக இருக்கும் என்று தெரிவித்துள்ளனர்.