
மேஷம்
புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவீங்க. அரசியல்வாதிகள் தேவையற்ற அலைச்சலை குறைத்துக் கொள்வது நல்லது. எல்லாவகையிலும் நன்மை உண்டாகும். லேடீஸ்க்கு எளிதில் முடிய வேண்டிய காரியம் கூட தாமதமாகலாம். மாணவர்கள் கல்வியில் கூடுதல் கவனம் செலுத்துவீங்க. ஒரு முறைக்கு இருமுறை பாடங்களைப் படிப்பீங்க. பிரபலமானவர்களின் ஆறுதலும், அன்பும் கெடைக்கும். தந்தைக்கு நன்மைகள் ஏற்படும். அரசு மரியாதை கிட்டும். உயர் பதவிகள் கெடைக்கும். பல புண்ணியத் தலங்களுக்கு பயணம் செய்யும் வாய்ப்பு கிட்டும். இலாபத்தை எதிர்பார்க்கலாம். சிலருக்குக் காரியத் தடைகள், வழக்கு வியாஜ்ஜியங்கள் ஏற்படலாம். அவற்றில் தீவிரமான முயற்சி காரணமாக வெற்றி காணலாம். கல்வியில் தேர்ச்சி, தெய்வ சிந்தனை மற்றும் தர்ம சிந்தனையும் ஏற்படும். சிலருக்கு உயர் ரக வாகனங்கள் கெடைக்கும்.
ரிஷபம்
திட்டமிட்டு செய்யும் காரியங்கள் வெற்றிகரமாக முடியும். கோபத்தை மட்டும் கொஞ்சமாச்சும் குறைப்பது நன்மை தரும். கலைத்துறையினருக்கு மிகவும் நன்மை பயக்கும் காலமாக இது அமையும். ஆபீசில் தொடர் பணிகளால் களைப்படைவீங்க. பட் அவார்ட்.. ரிவார்ட்.. பாராட்ஸ்.. கெடைக்குங்க. தொழில் வியாபாரம் தொடர்பான காரியங்கள் அலைச்சலுக்கு பின் நல்லபடியா நடந்து முடியும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மேலதிகாரிகள் ஆதரவு கிடைக்கும். குடும்பத்தில் கணவன், மனைவிக்கிடையே அனுசரித்துச் செல்வதன் மூலம் குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். வீடு, வாகனம் தொடர்பான செலவுகள் ஏற்படலாம். கலைத்துறையினருக்கு தொழில் தொடர்பாக வீண் அலைச்சல் இருக்கும். இந்த வாரம் குடும்பத்தில் இருந்த குழப்பம் நீங்கும். கணவன், மனைவிக்கிடையே இருந்த மனவருத்தம் நீங்கும்.
சந்திராஷ்டமம் : ஏப்ரல் 18 முதல் ஏப்ரல் 20 வரை
சந்திராஷ்டம தினங்களில் பேச்சிலும் செயலிலும் கவனமாக இருக்க வேண்டும்.
மிதுனம்
பிள்ளைகளுக்கு தேவையான பொருட்களை வாங்கி கொடுப்பீர்கள். இந்த வாரம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். கொடுக்கல், வாங்கலில் கவனம் தேவை. வீண் அலைச்சல் தடை தாமதம் ஏற்படலாம். புதிய முயற்சிகளை தள்ளிபோடுவது நல்லது. எதிர்ப்புகள் விலகும். எல்லா நன்மைகளும் உண்டாகும். பயணம் மூலம் நன்மை கிடைக்கும். இந்த வாரம் நீங்கள் செய்யும் காரியங்களால் பெருமை ஏற்படும். பணவரத்து அதிகரிக்கும். புத்திசாதுரியம் கூடும். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். தொழில் வியாபாரத்தில் முன்னேற்றமான நிலை காணப்படும். வியாபார நிமித்தமாக பயணங்கள் செல்ல வேண்டி இருக்கும். கடந்த சில வாரங்களாக ஒங்களோட நிம்மதியை கெடுத்த சில பிரச்சினைகள் மறைந்து, வாரத்தின் பிற்பகுதியில் நிம்மதியான உறக்கம் காணுவீங்க. சிலருக்கு கண் சம்பந்தமா இருந்துக்கிட்டிருந்த பிரச்னை ஒன்றிற்கு நிரந்தரமாத் தீர்வு காணுவீங்க.
சந்திராஷ்டமம் : ஏப்ரல் 20 முதல் ஏப்ரல் 22 வரை
சந்திராஷ்டம தினங்களில் பேச்சிலும் செயலிலும் கவனமாக இருக்க வேண்டும்.
கடகம்
இந்த வாரம் காரியங்களில் இருந்த பின்னடைவு நீங்கும். எதிர்பார்த்த பணவரவு இருக்கும். அரசியல்வாதிகள் கட்சி ரகசியங்களை வெளியிட வேண்டாம். தொகுதியில் மதிப்பு கூடும். இந்த வாரம் யதார்த்தமான படைப்புகளால் அனைவரின் கவனத்தையும் ஈர்ப்பார்கள. வேற்றுமொழி வாய்ப்புகளால் புகழடைவீங்க. சம்பளப் பாக்கி கைக்கு வரும். சின்னதா ஒரு டூர் உண்டு. அது உங்களை பேட்டரி சார்ஜ் பண்ணியதுபோல் உற்சாகமாக்கிட்டும். சூப்பர்ல? எதையும் எதிர்கொள்ளும் துணிச்சல் ஏற்படும். உத்தியோகஸ்தர்கள் சக ஊழியர்களை அனுசரித்து செல்வது நல்லது. குடும்பம் பற்றிய கவலைகள் ஏற்பட்டாலும் அவை நீங்குவதுடன் உடல் ஆரோக்கியமும் அடையும். மனதில் பக்தி உண்டாகும். சகோதரர்கள் மற்றும் உறவினர்களிடம் பேசும்போது கொஞ்சம் கூடுதல் கவனமா இருங்க. எல்லா காரியங்களும் கைகூடும். எதிர்ப்புகள் நீங்கும்.
சந்திராஷ்டமம் : ஏப்ரல் 22 முதல் ஏப்ரல் 24 வரை
சந்திராஷ்டம தினங்களில் பேச்சிலும் செயலிலும் கவனமாக இருக்க வேண்டும்.
சிம்மம்
அரசியல்வாதிகள் நற்செயல்களின் வெளிப்பாடுகளால் உயர்வைப் பெற்று புகழ் பெறுவீங்க. பெண்கள் எந்த ஒரு செயலையும் யோசித்து செய்வது நல்லது. மாணவர்கள் கல்வியில் வெற்றி பெற திட்டமிட்டு பாடங்களை படிப்பதும் தேவையற்ற பிரச்சினைகளில் தலையிடாமல் இருப்பதும் நல்லது. குடும்பத்துல மகிழ்ச்சி இருக்கும். கணவன் மனைவிக்கிடையே இதுவரை இருந்து வந்த கருத்து வேற்றுமை நீங்கி நெருக்கம் அதிகரிக்கும். பிள்ளைகளுக்கு தேவையான பொருட்களை வாங்கி கொடுப்பீங்க. பெண்களுக்கு மிக கவனமாக பேசுவதும், கோபத்தை குறைப்பதும் நன்மை தரும். எதிர்பார்த்த பணஉதவி கெடைக்கும். நிலுவையில் உள்ள காரியங்கள் சிறப்பாக முடிய வழி பிறக்கும். வரவேண்டிய பணம் கைக்கு வந்து சேரும். இந்த வாரம் பணவரவு எதிர்பார்த்தபடி இருக்கும். எதிர்ப்புகள் விலகும்.
கன்னி
உத்தியோகத்துல உள்ளவங்க எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்கும். பிள்ளைகள் எதிர்காலம் பற்றிய சிந்தனை அதிகரிக்கும். உறவினர்கள் மூலம் நன்மை உண்டாகும். பெண்களுக்கு மனோ தைரியம் கூடும். கலைத்துறையினருக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். பொருளாதார நிலையில் முன்னேற்றம் காணப்படும். எடுத்த காரியத்தை செய்யும் போது எது சரி, எது தவறு என்று தடுமாற்றம் ஏற்பட்டாலும் திறமையால் அதனை செய்து முடிப்பீங்க. பணவரவு எதிர்பார்த்தபடி இருக்கும். தொழில் வியாபாரம் முன்னேற்ற பாதையில் செல்லும். நிதி உதவி கெடைக்கும். வாடிக்கையாளர் மத்தியில் மதிப்பு கூடும். ஆபீஸ்ல இருப்பவர்களுக்கு நீண்ட நாட்களாக எதிர்பார்த்துக்கிட்டிருந்த பதவி உயர்வு கிடைக்கவும் சம்பள உயர்வு ஏற்படவும் அதிக சான்ஸஸ் இருக்குங்க. இஷ்டத்திற்கு விரோதமாக காரியங்கள் நடந்தாலும் முடிவு சாதகமாக இருக்கும்.
துலாம்
இந்த வாரம் எதிலும் முன்னேற்றம் காணப்படும். வீண் விவகாரங்களில் தலையிடாமல் இருப்பதும் நன்மை தரும். தொழில் வியாபாரம் தொடர்பான காரியங்களில் திடீர் தடை ஏற்படலாம் வீண் ஆசைகள் மனதில் தோன்றும். கட்டுப்பாட்டுடன் இருப்பது நல்லது. எந்த ஒரு செயலையும் யோசித்து செய்வது நல்லது. ஆபீஸ்ல பணிசுமை குறைந்து காணப்படும். நிலுவையில் இருந்த பணம் கிடைக்கும். குடும்பத்தில் இருப்பவர்களுக்கு தேவையானவற்றை செய்து கொடுத்து அவர்களது நன்மதிப்பை பெறுவீங்க. ஆன்மீக நாட்டம் அதிகரிக்கும். கலைத்துறையினருக்கு புதிய வாய்ப்புகள் தேடிவரும். கிடைக்கும் வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்வது புத்திசாலித்தனம். குழந்தைகள் உற்சாகமாக காணப்படுவாங்க. மனத் திருப்தியுடன் காரியங்களை செய்து சாதகமான பலன் பெறுவீங்க. பயணம் செல்ல நேரலாம்.
விருச்சிகம்
எல்லா வகையிலும் நன்மை உண்டாகும். எதிலும் சாதகமான பலன் கிடைக்கும். மற்றவர்களுக்கு உதவி செய்து அதன் மூலம் நன்மதிப்பு பெறுவீங்க. உடல் ஆரோக்கியம் உண்டாகும். பணவரத்து திருப்தி தரும். பயணங்கள் செல்ல நேரிடும். விருந்து நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் சூழ்நிலை வரும். முக்கிய நபர்களின் உதவி கிடைக்கும். புதிய வீடு வாகனம் வாங்கக்கூடிய யோகம் ஏற்படும். பிள்ளைகளின் செயல்பாடுகள் மனசுக்குத் திருப்தி அளிப்பதாக இருக்கும். தேவையற்ற சில காரியங்களை செய்ய வேண்டி இருந்தாலும் அதன் மூலம் நன்மை உண்டாகும். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் காண வேண்டும் என்ற ஆர்வம் உண்டாகும். விளையாட்டு போட்டிகளில் திறமை வெளிப்படும். கலைஞர்கள் தங்கள் தொழிலில் மிகுந்த அக்கறையுடன் செயல்பட்டு நிறைவான பொருளாதாரமும் அதிகமான புகழும் பெறுவீங்க.
தனுசு
அரசியல்வாதிகள் உத்வேகத்துடன் பணியாற்றுவீங்க. பெண்கள் நன்மை தீமை பற்றிய கவலை இல்லாமல் எதையும் செய்ய முற்படுவீங்க. நட்பு வட்டத்தில் நிதானமாக பழகுவது நல்லது. மாணவர்களுக்கு பாடங்களில் இருந்த சந்தேகம் நீங்கும். உற்சாகமாக படிப்பீர்கள். சக மாணவர்களிடம் பழகும்போது கவனம் தேவை. பணவரத்து கூடும். காரிய அனுகூலம் உண்டாகும். தொழில் வியாபாரத்தில் இருந்த மந்த நிலை மாறும். விற்பனை அதிகரிக்கும். பழைய பாக்கிகள் வசூலாவதில் வேகம் காணப்படும். சாதகமான காலகட்டமாக இருந்தாலும் புத்திக்கூர்மையுடன் செயல்களை ஆராய்ந்து செய்வது நன்மை பயக்கும். இழுபறியாக இருந்த காரியம் சாதகமாக முடியும். மாணவர்களுக்கு கல்வியில் திறமை அதிகரிக்கும். அலுவலக வேலைகள் உடனே முடியாமல் இழுபறியாக இருக்கும்.
மகரம்
மனம் மகிழும் சம்பவங்கள் நடக்கும். மனக்கவலை குறையும். எல்லாவகையிலும் சாதகமான பலன் கிடைக்க பெறுவீங்க. சற்று கூடுதலாக எதிலும் கவனம் செலுத்துவது நல்லது. திடீர் செலவு உண்டாகலாம். திட்டமிட்டபடி செல்ல முடியாமல் பயணத்தில் தடங்கல் ஏற்படலாம். ரொம்பக் காலமா நிலுவையில் இருந்த பிரச்சினைங்க முடிவுக்கு வந்து ஒரு நிம்மதிப்பெருமூச்சை உங்க கிட்டேயிருந்து வெளிப்படுத்தும். புதிய வாகனம் அல்லது சொத்து வாங்கும் வகையில் செலவுகள் இருக்கும். அது மிகுந்த சந்தோஷத்தை ஒங்களுக்குக் கொடுக்கும். உங்க தாயின் உடல் நிலைல இருந்துக்கிட்டிருந்த பிராப்ளம்ஸ் எல்லாம் தீர்ந்து அவங்களுக்கு நல்ல ஆரோக்கியம் மேம்படும். எனவே குடும்பத்துக்கே நிம்மதி உண்டாகும். வெளியில் தங்கும் சூழல் ஏற்படும். உங்க உத்தியோகத்தைப் பொறுத்தவரை இது அனுகூலமான காலக்கட்டாமாக இருக்கும்.
கும்பம்
பலரும் பொறாமைப்படும் அளவிற்கு உங்கள் வளர்ச்சி இருக்கும். மேலிடத்திலிருந்து முழு ஆதரவும் கிடைக்கப்பெறுவீங்க. மாணவர்களுக்கு கல்வியில் இருந்த போட்டிகள் குறையும். மறைமுக எதிர்ப்புகள் நீங்கும். மனதில் நம்பிக்கை உண்டாகும். மனோ தைரியம் கூடும். எதிர்ப்புகள் விலகும். எந்த சூழ்நிலையையும் அனுசரித்து செல்வீங்க. வீண்குழப்பம், காரியத் தடை ஏற்பட்டு நீங்கும். வாகனங்களில் செல்லும் போது கூடுதல் கவனம் தேவை. பயணங்கள் செல்ல வேண்டி இருக்கும். கவன தடுமாற்றம் உண்டாகலாம். பணவரத்து தாமதப்படும். தொழில் வியாபாரத்தில் சீரான நிலை காணப்படும். எதிர்பார்த்தபடி ஆர்டர்கள் கிடைப்பது தாமதமாகலாம். அரசாங்கம் தொடர்பான காரியங்களில் மெத்தனபோக்கு காணப்படும். உத்தியோகத்துல இருப்பவர்களுக்கு விருப்பமற்ற இடமாற்றம் உண்டாகலாம்.
மீனம்
பங்கு வர்த்தகம் மற்றும் ட்ரேடிங் மூலம் நல்ல ஆதாயம் கிடைக்கப் போகுதுங்க. புதிய முயற்சிகளுக்காக நீங்க பணத்தை செலவு செய்யப் போறீங்க. அதுக்கு நல்ல ரிசல்ட் உண்டு. இந்த வாரம் வெளியூர் அல்லது வெளிநாட்டு பயணம் செல்ல நேரலாம். பணவரத்து எதிர்பார்த்தபடி இருக்கும். உடல் ஆரோக்கியம் உண்டாகும். வியாபாரத்தில் இருந்த போட்டிகள் அகலும். தடைப்பட்ட பண உதவி கிடைக்கும். உத்தியோகத்துல இருப்பவர்களுக்கு இருந்த மறைமுக எதிர்ப்புகள் நீங்கி செயல்களில் வேகம் காண்பிப்பீர்கள். குடும்பத்தில் இருந்த வீண் பிரச்சினைகள் நீங்கி அமைதி ஏற்படும். எதிர்ப்புகள் விலகும். குடும்ப பிரச்சினைகள் தீரும். பணவரவு திருப்தி தரும். வாய்க்கு ருசியான உணவு கிடைக்கும். வாக்குவன்மை அதிகரிக்கும். சொன்ன சொல்லை காப்பாற்றுவீங்க. அறிவுத்திறன் அதிகரிக்கும். பெயரும், புகழும் கூடும்.