சென்னை

தமிழக ஆளுநர் ஆர் என் ரவி திடீர் என டெல்லி சென்றுள்ளார்.

ஆளுநர் ஆர்.என்.ரவி 4 நாள் பயணமாக டெல்லி புறப்பட்டு சென்றுள்ளார். அவருடன் அவருடைய தனி செயலாளர், உதவியாளர், பாதுகாப்பு அதிகாரி ஆகியோரும் சென்றுள்ளனர். ஆளுநர் ஆர்.என்.ரவி, வரும் 20ம் தேதி மூலமாக சென்னைக்கு திரும்புகிறார்.

கவர்னர் ரவி,மத்திய அரசின் அவசர அழைப்பின்பேரில் டெல்லி சென்றுள்ளதாகவும் அவர் அங்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, உயர் அதிகாரிகள் மற்றும் சட்ட நிபுணர்களை சந்தித்து பேசுவார் என்றும் கூறப்படுகிறது.

மேலும் மசோதாக்கள் தொடர்பான உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு குறித்து ஆலோசனை நடத்துவதற்காகவும் ஆளுநர் ஆர் என் ரவி டெல்லி சென்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.