சென்னை:  சட்டப்பேரவையில் முதலமைச்சர் கொண்டு வந்த மாநில சுயாட்சி தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக, பாஜக வெளிநடப்பு நடத்தன. ஆனால், அதிமுக ஆதரவு கட்சியான பாமக தீர்மானத்துக்கு ஆதரவு தெரிவித்தது.

சட்டப்பேரவையில் முதலமைச்சர் விதி 11ன்கீழ் மாநில சுயாட்சி தொடர்பாக உரையாற்றினார். அப்போது,   மாநிலங்களின் நியாமான உரிமைகளை பாதுகாக்க குரியன் ஜோசப் தலைமையில் உயர்மட்ட குழு அமைக்கப்படும். உயர்நிலைக்குழு ஜனவரியில் இடைக்கால அறிக்கையும், 2 ஆண்டுகளில் இறுதி அறிக்கையும் வழங்கும் என்றார்.

இதனையடுத்து, மாநில சுயாட்சி தொடர்பாக முதலமைச்சர் தீர்மானம் ஒன்றை கொண்டு வந்தார். இந்த தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக, பாஜக பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தது. இதையடுத்து,   மாநில சுயாட்சி தொடர்பாக முதல்வர் கொண்டு வந்த தீர்மானத்தின் மீது விவாதம் நடைபெற்றது.

இந்த தீர்மானத்தின்மீது பேசிய பாஜக  எம்எல்ஏ  எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் அவையில் பேசும்போது, முதலமைச்சர் கேரளாவுக்கு செல்லும்போது மலையாளத்தில் பேசினார் என தெரிவித்தார். அப்போது பேசத்தொடங்கிய சபாநாயகர் அப்பாவு, பிரதமர் கூட தமிழில் பேசுகிறார். அவர் தமிழ்நாட்டுக்கு வந்தபோது வணக்கம் என சொல்லவில்லையா, அதுபோல தான் இதுவும் என பதில் அளித்தார். இதைத்தொடர்ந்து அவையில் சிரிப்பலை பரவியது.

இதற்கிடையே எழுந்த முதல்வர் ஸ்டாலின், மலையாளத்தில் தாம் பேசியதை தமிழில் எழுதி வைத்துதான் படித்தேன் என விளக்கம் அளித்தார். இதையடுத்து மாநில சுயாட்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக எம்எல்ஏக்களும் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். ஆனால், இந்த தீர்மானத்துக்கு பாமக ஆதரவு வழங்கியது.

இதனையடுத்து, தீர்மானத்திற்கு ஆதரவு தெரிவித்த கட்சிகளுக்கு முதலமைச்சர் மு,.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்தார்.