தமிழ்நாடு வந்துள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா சென்னையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார்.
பாஜக மாநில தலைவர் மாற்றம் குறித்து கட்சியினரிடையே பேசிய அவர் இன்று மாலை அரசியல் ஆலோசகர் ‘துக்ளக்’ குருமூர்த்தியை சந்திப்பார் என்று கூறப்பட்டது.

இந்த நிலையில், யாரும் எதிர்பாராத வகையில் திடீரென இன்று மதியம் ‘துக்ளக்’ குருமூர்த்தியை அவரது மைலாப்பூர் இல்லத்தில் நேரில் சென்று சந்தித்தார் அமித் ஷா.
2026ம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கு பாஜக யாருடன் கூட்டணி அமைப்பது என்பது உள்ளிட்ட பல்வேறு அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த ஆலோசனைகள் நடைபெற்றதாகக் கூறப்படுகிறது.
அதிமுக-வுடன் கூட்டணி அமைப்பதா அல்லது பாஜக-வுடன் கூட்டணி அமைப்பதா என்பதில் ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் இடையே ஏற்பட்ட மோதலை அடுத்து அதிமுக கூட்டணியில் இடம்பெற துடிக்கும் ராமதாஸ் தனது மகன் அன்புமணியை கட்சியின் முக்கிய தலைவர் பொறுப்பில் இருந்து நீக்கி தானே தலைவர் பதவியில் வகிக்க இருப்பதாக நேற்று அறிவித்தார்.
அமித்ஷா வருகைக்கு ஒருசில மணி நேரங்களுக்கு பாமக வெளியிட்ட இந்த அறிவிப்பால் ஜெர்க் -ஆன பாஜக தமிழ்நாட்டில் எந்த கட்சியுடன் கூட்டணி அமைப்பது என்பது குறித்தும் வேறு எந்த கட்சிகளுக்கு தூண்டில் போடலாம் என்பது குறித்தும் குருமூர்த்தியுடன் ஆலோசித்ததாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து தமிழக அரசியலில் அடுத்த சில வாரங்களில் பல்வேறு மாற்றங்கள் ஏற்படும் என்று அரசியல் ஆர்வலர்கள் ஆருடம் கூறியுள்ளனர்.