சென்னை தி.மு.க-வின் துணை பொதுச் செயலாளராக திருச்சி சிவா நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை கட்சி தலைவரும், முதலமைச்சருமான ஸ்டாலின் பிறப்பித்துள்ளார்.

முன்னதாக,  பெண்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய அமைச்சர் பொன்முடி அப்பதவியில் இருந்து  நீக்கப்பட்ட நிலையில், அந்த இடத்திற்கு திருச்சி சிவா நியமிக்கப்பட்டு உள்ளார்.

ஏற்கனவே திமுகவின் கொள்கைப் பரப்புச் செயலாளராக உள்ள திருச்சி சிவா அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டு, துணைதுப்பொதுச் செயலாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக திமுக தலைமைக்கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

தி.மு.க. துணைப் பொதுச்செயலாளர் நியமனம் தலைமைக் கழக அறிவிப்பு!

கழக சட்டதிட்ட விதி: 17 பிரிவு 3-ன்படி கழக கொள்கைப் பரப்புச் செயலாளராக பொறுப்பு வகித்து வரும் திரு  @tiruchisiva எம்.பி., அவர்களை அப்பொறுப்பிலிருந்து விடுவித்து தி.மு.க. துணைப் பொதுச்செயலாளர் நியமிக்கப்படுகிறார்.

இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

பொதுவாக கட்சி உறுப்பினர்கள் நீக்கம்  மற்றும் புதிய பதவிகள் வழங்குவது தொடர்பாக கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுரகன்  மட்டுமே அறிவிப்பு வெளியிட்டு வரும் நிலையில், இந்த பணி நீக்கம் மற்றும் நியமனம் கட்சியின் தலைவரான முதல்வர் ஸ்டாலின் பெயரில் வெளியிடப்பட்டு உள்ளது.

பெண்கள் குறித்து சர்ச்சை பேச்சு: தி.மு.க துணை பொதுச்செயலாளர் பதவியில் இருந்து பொன்முடி நீக்கம்

மீண்டும் மீண்டும் சர்ச்சை பேச்சு: அமைச்சர் பொன்முடியை கண்டித்து பதிவு போட்ட திமுக எம்.பி. கனிமொழி