சென்னை: மீண்டும் மீண்டும் சர்ச்சைக்குரிய வகையில் பேசி சலசலப்பை ஏற்படுத்தி வரும் திமுக அமைச்சர் பொன்முடிக்கு கடும் கண்டனம் எழுந்துள்ள நிலையில், திமுக எம்.பி.யுடம், தி.மு.க. துணை பொதுச்செயலாளர் கனிமொழி கடும் கண்டனம் தெரிவித்து பதிவு போட்டுள்ளார்.

விழுப்புரத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த நிகழ்ச்சி ஒன்றில் அமைச்சர் பொன்முடி பேசியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. அவரது பேச்சை எழுதக்கூட முடியாத அளவுக்கு அறுவருப்பதாக உள்ளது. இதனால், அமைச்சர் பொன்முடி பேச்சுக்கு சமூக வலைத்தளங்களில் கடும் எதிர்ப்பு கிளம்பி வருகிறது. அவர்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பலர் கோர்க்கொடி தூக்கி வருகின்றனர். அமைச்சர் பொன்முடியை சமுக வலைதளங்களில் நெட்டிசன்கள் கழுவி ஊற்றி வருகின்றனர்.
பாஜக மாநில துணைத்தலைவர் நாராயணன் திருப்பதி விடுத்துள்ள கண்டன செய்தியில், “இந்த ஆளையெல்லாம் அமைச்சராக்கிய நபரைத் தான் கண்டிக்க வேண்டும். கேவலமான சிந்தனை. பெண்கள் எதிரிலேயே இழிவாக, தரக்குறைவாக பேசும் தரக்குறைவான, கேடுகெட்ட இந்த நபரை அமைச்சர் பதவியில் இருந்து நீக்காமல் இருப்பது தான் திராவிட மாடல். முக ஸ்டாலின் அவர்களே, இதை கேட்டு ரசிப்பீர்களா? அமைச்சர் பொன்முடியை பெண் வன்கொடுமை சட்டத்தில் கைது செய்ய உத்தரவிடுவீர்களா?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்த நிலையில், அமைச்சர் பொன்முடிக்கு திமுக எம்.பி. கனிமொழி தன் கண்டத்தை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் வலைதள பதிவில், “அமைச்சர் பொன்முடி அவர்களின் சமீபத்திய பேச்சு ஏற்றுக்கொள்ள முடியாதது. எந்த காரணத்திற்காகப் பேசப்பட்டிருந்தாலும் இப்படிப்பட்ட கொச்சை யான பேச்சுகள் கண்டிக்கத்தக்கது” என்று தெரிவித்துள்ளார்.
திமுக அமைச்சர்களும், எம்.பி.க்களும் பெண்கள் குறித்தும், இந்து மதம் குறித்தும் அடிக்கடி சர்ச்சைக்குரிய பேசுவது வாடிக்கையாகி வருகிறது. ஆனால், கேவலமான சிந்தனை கொண்டவர்கள், பெண்கள் எதிரிலேயே இழிவாக, தரக்குறைவாக பேசும் தரக்குறைவான, கேடுகெட்ட நபர்கள்மீது நடவடிக்கை எடுக்க திமுக அரசும் தயங்கி வருகிறது. அவர்களை பதவியில் இருந்து தூக்கி எறிய சமத்துவம் மற்றும் திராவிட மாடல் என பீற்றிக்கொள்ளும் முதல்வர் ஸ்டாலினும் முன்வருவது இல்லை.
சாதாரன அவதுறு பதிவுகளுக்கே இரவோடு இரவாக கைது நடவடிக்கை மேற்கொள்ளும் காவல்துறையினர், இதுபோன்று சர்ச்சைக்குரிய வகையில் பேசும் திமுகவினர் மீது நடவடிக்கை எடுக்க தயங்கி வருகின்றனர். இதுபோன்ற செயல்களால் காவல்துறையினரின் நடவடிக்கையும் கேலிக்குரியதாகி வருகிறது.
இந்த நிலையில், பல்வேறு சர்சைசைகளில் சிக்கியும், ஊழல் குற்றச்சாட்டிலும் சிக்கி உள்ள அமைச்சர் தற்போது ஜாமின் மூலம் வெளியே வந்து மீண்டும் அமைச்சராக உள்ள நிலையில், தற்போது மேலும் ஒரு சர்ச்சையில் சிக்கி உள்ளார்.

திமுக தலைவர்களில் அதிகப்படியான சர்ச்சைகளில் தொடர்ந்து சிக்கி வரக்கூடிய அமைச்சர் பொன்முடி, அண்மையில் நடைபெற்ற திமுக நிகழ்ச்சியில் பேசும் போது, மிக மிக ஆபாசமான விஷயங்களை பேசி சர்ச்சையில் சிக்கி உள்ளார். (நாகரிகம் கருதி அவர் பேசியதை இங்கு எழுத முடியவில்லை} இதற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.
திமுக தலைவர்களில் அதிகப்படியான சர்ச்சைகளில் தொடர்ந்து சிக்கி வரக்கூடிய அமைச்சர் பொன்முடி, அண்மையில் நடைபெற்ற திமுக நிகழ்ச்சியில் பேசும் போது, மிக மிக ஆபாசமான விஷயங்களை பேசி சர்ச்சையில் சிக்கி உள்ளார். (நாகரிகம் கருதி அவர் பேசியதை இங்கு எழுத முடியாத நிலை)‘ இதற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.
தி.மு.க ஆட்சிக்கு வந்து கடந்த நான்கு ஆண்டுகளில், பல அமைச்சர்களின் செயல்பாடுகள் கடும் விமர்சனத்துக்கும் கண்டனத்துக்கும் உள்ளாகின. குறிப்பாக, உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், நகராட்சி நிர்வாகம் மற்றும் நகர்ப்புற வளர்ச்சி, ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் கே.என்.நேரு, நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் உள்ளிட்ட அமைச்சர்களின் சர்ச்சைப் பேச்சுகளுக்கும் செயல்பாடுகளுக்கும் சமூகவலைதளங்களில் கண்டனம் எழுந்தது.
தி.மு.க அரசின் திட்டத்தால் பெண்கள் ஓசியில் பயணம் செய்கிறார்கள் என்றும், ‘ஓசி பஸ்’ என்றும் அமைச்சர் பொன்முடி ஒரு கூட்டத்தில் பேசினார். அவரது பேச்சு கடும் விமர்சனத்துக்கு உள்ளானது அதேபோல, விழுப்புரம் மாவட்டத்தில் நியாயவிலைக் கடை கட்டடத் திறப்பு விழாவில் அமைச்சர் பொன்முடி பேசினார். அப்போது, “பெண்களுக்கு திராவிட மாடல் முக்கியத்துவம் கொடுக்கிறது” என்று கூறிய பொன்முடி, ஒன்றியக் குழு தலைவரைப் பார்த்து, “ஏம்மா…நீ எஸ்.சி தானே…” என்று மேடையிலே சாதியை குறித்து பேசினார். அதுவும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

அமைச்சர் ராஜகண்ணப்பன் பி.டி.ஓ ஒருவரை சாதியைச் சொல்லித் திட்டினார் என்று குற்றச்சாட்டு எழுந்தது. அதனால், போக்குவரத்துறை அமைச்சராக இருந்த அவர், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக மாற்றப்பட்டார்.
அமைச்சர் எ.வ.வேலு, `நிலம் இல்லாதவன்கூட, ஒரு பச்சைத் துண்டைப் போட்டுக்கொண்டு நிலத்தை எடுக்கக் கூடாது என்கிறான்’ என்று விவசாயிகளைக் கொச்சைப்படுத்தும் விதமாகப் பேசினார்.
காவல்துறை அதிகாரி ஒருவரைப் புகழ்ந்து பேசுவதாக நினைத்து, ‘அவரின் திறமை என்னவென்றால், ஒருவரைக் குற்றவாளியாக ஆக்கவும் முடியும்… குற்றவாளிப் பட்டியலிலிருந்து நீக்கவும் முடியும்’ என்று கூறி அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்தார் அமைச்சர் நேரு.
தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், தன்னைச் சந்திக்க வந்த குறவர் பழங்குடியின மக்களின் பிரதிநிதிகளையும், தென்காசி (தனி) நாடாளுமன்ற உறுப்பினர் தனுஷ்குமாரையும் மரியாதைக் குறைவாக நடத்தியதாகச் சர்ச்சை எழுந்தது.
ஏற்கனவே கடந்த ஆண்டு விழுப்புரம் கூட்டத்தில் பேசும்போது, கூட்டத்தில் இருந்த ஒரு பெண் நிறைய குறைகள் இருப்பதாகக் கூறினார். அதனால் எரிச்சலடைந்த அமைச்சர் பொன்முடி, “என்னது குறையா… கொஞ்சம் வாயை மூடிக்கிட்டு இரு” என்று கோபப்பட்டார். பிறகு, “உன் வூட்டுக்காரர் வந்திருக்காரா?” என்று பொன்முடி கேட்டார். அதற்கு, “அவர் போயிட்டார் (இறந்துவிட்டார்)” என்று அந்தப் பெண் பதில் சொல்ல… “போயிட்டாரா… பாவம்… நல்லவேளை…” என்று சிரித்தார் பொன்முடி.
அமைச்சர் பொன்முடியின் இந்தப் பேச்சு சமூகவலைதளங்களில் அதிகமாகப் பகிரப்பட்டது. இந்த நிலையில் மீண்டும் சர்ச்சைக்குரிய வகையில் பேசி மீண்டும் அவர் சர்ச்சைக்கு உள்ளாகியிருக்கிறார்.
அமைச்சர்களின் விரும்பத்தகாத இத்தகைய பேச்சுகளாலும் செயல்களாலும், தி.மு.க அரசின் நற்பெயருக்கு களங்கம் ஏற்பட்டுள்ளது மட்டுமின்றி மக்களிடையே திமுக தனது செல்வாக்கை இழந்து வருவதும் குறிப்பிடத்தக்கது.